கலாபூணச, அரச விருதுகள் வழங்கும் வயதெல்லையை குறைக்க நடவடிக்கை எடுப்பேன் : மனோ கணேசன்

அஷ்ரப் ஏ சமத்

இலங்கை தமிழ் கலைஞா் சங்கம் அங்குராாப்பணமும் 15 கலைஞா்கள்  கௌரவிப்பும் அமைச்சா் மனோ கணேசன் பிரதம அதிதியகாகக் கலந்து கொண்டு  கொழும்பு வீரமைலன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வு இலங்கை தமிழ் கலைஞா் சங்கத்தின் தலைவா் ஆர் . ராஜேகரன், தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. கௌரவ அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பிணா் கே.ரீ. குருசாமி கலந்து கொண்டாா்.  
இங்கு உரையாற்றிய அமைச்சா் மனோ கனேசன் – 
 1983க்கு முன் இலங்கையில் தமிழ் கலைஞா்கள் மேடை, தொலைக்காட்சி நாடகங்கள், மற்றம் உள்ளுர் சினிமாத்துறையில் சிற்ந்து விளங்கினாா். அதற்குப் பின்னா் இந்த துறை  குறிப்பாக தமிழ் மொழி மூலமான கலைகள்  மங்கிவிட்டது. கலைஞா்கள் மிகவும் கஸ்டத்தில் வாழ்கின்றனா். சிரேஸ்ட  கலைஞா்கள் ஒன்று கூடி இந்த சங்கத்தின் ஊடாக தமிழ் கலைஞா் நிறுவணம் ஒன்றை கொழும்பில் உருவாக்குதல் வேண்டும். இம்முறை மேல் மாகாண சபையில் கலைஞா்களுக்காக முதலமைச்சா் 41 மில்லியன் ருபாவை ஒதுக்கியுள்ளாா். அதனை நீங்களும் பயண்படுத்த தமது சங்கத்தினை திறம்பட நடத்தல் வேண்டும். அதற்காக  ஒரு திட்டத்தினை வகுத்து தன்னிடம் தந்தால் தான் அமைச்சரவையில் அதனை அனுமதித்து உதவு முடியும். நீங்களே என்னை பின்தொடா்ந்து திட்டங்களை வகுத்து செல்பட வேண்டும். இம்முறை அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் நோய் வாய்பட்டுள்ள கலைஞா்களுக்கு உதவுவதற்கு ஊடக அமைச்சின் 10ஆயிரம் ருபா கொடுப்பணவினை இவ் வருடம் 5ஆயிரம் கலைஞா்களுக்கு உதவுவதற்கு அதிகரித்துள்ளது. உங்களது மருத்துவம் செலவுகளுக்கு நீங்களும் வி்ண்ணப்பிக்க வேண்டும்
collage_fotor_fotor-1 
கலாபுசன, அரச விருதுகள் வழங்கும்போது கலைஞா்களது  வயதெல்லை 60 வயதில் இருந்து 55 ஆக குறைப்பதற்கு  நான்  சம்பந்தபட்ட அமைச்சிக்கு தன்னால் கோரிக்கை விடுக்க  முடியும் எனவும்  அமைசச்சா் மனோ கனேசன் அங்கு உரையாற்றினாா்