கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்க்கட்சியை சேர்ந்த பல உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் அரசாங்கத்தில் இணைய அவர்கள் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்கள் வெளிநாட்டு தூதுவர் பதவிகளை கோரி அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராகி வருவதாகவும் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் இவர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள் எனவும் அமைச்சர் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.