இலங்கை நகர அபிவிருத்தி அதிகார சபை, சிங்கப்பூர் “ரெமாசெக்” ஆதார மன்றம், வாழத்தகு நகரங்களின் மையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த நகர அபிவிருத்தி தொடர்பிலான மூன்று நாள் செயலமர்வு அண்மையில் பத்தரமுல்லை, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு செயலமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதில் நகர அபிவிருத்தி சபையின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ, பணிப்பாளர் நாயகம் நயன மாவில்மட கல்முனை மாநகர முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முசம்மில், காணி மீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபன பொது முகாமையாளர் சிரிமதி சேனாதீர, கல்முனை மாநகர முதல்வரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர் உட்பட நகர அபிவிருத்தி அமைச்சின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
மூன்று நாட்களும் இந்த செயலமர்வில் பங்கேற்றவர்களுக்கு இறுதி நாள் நிறைவு நிகழ்வில் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.