சுற்றாடல் முன்னோடிகளுக்கான ஜனாதிபதி பதக்கத்துக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகபரீட்சை!

எம்.வை.அமீர்

சுற்றாடலை மேன்படுத்தும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக வருடாவருடம் வழங்கிவரும் ஊக்குவிப்பு பதக்கங்களில் இம்முறை முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்விவலயத்தின் நிந்தவூர் அல் – அஷ்ரக் தேசிய பாடசாலையின் மாணவர்கள் நேர்முகபரீட்சைக்கு தோற்றுவதற்கு தெரிவாகியிருந்தனர்.

மேற்படி மாணவர்களுக்கான நேர்முகபரீட்சை 2015-05-18ல் நிந்தவூர் அல் -அஷ்ரக் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. குறித்த நேர்முகபரீட்சைக்கு ஏ.எச்.இன்பாசா ஹமீட்,எம்.ஐ.ஏ.இஹ்ஜாஸ்,எம்.பாத்திமா சம்லா மற்றும் ஏ.எம்.பாத்திமா சறாபா என்ற நான்கு மாணவர்கள் தோற்றியிருன்தனர்.

குறித்த மாணவர்களை பரீட்சித்து ஜனாதிபதி பதக்கத்துக்கு சிபார்சு செய்வதற்காக ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச்செயலாளர் திருமதி சீ.விக்ரமசிங்க, கல்வி அமைச்சில் இருந்து விவசாய தொழில்நுட்ப பணிப்பாளர் திருமதி தமயந்தி பாலசூரிய, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கல்வி விழிப்பூட்டல் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் ஜயவிலால் பெர்னாண்டோ, பிரதிப்பணிப்பாளர் ஹெமரத்ன திசாநாயக்க மற்றும் அம்பாறை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக் போன்றோர் வருகை தந்திருந்தனர்.

சுற்றாடல் முன்னோடிகளுக்கான ஜனாதிபதி பதக்கத்துக்கு மாணவர்களை தெரிவு செய்வது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கிழக்கு மாகாண பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ.சீ.நஜீப் அவர்களை வினவியபோது ஆண்டு 6 தொடக்கம் 13 ஆண்டுவரை கல்விகற்கும் மாணவர்களை தெரிவு செய்து ஐந்து விதமான  பதக்கங்கள் வழங்கப்படுவதாகவும் அதில், சுற்றாடல் முன்னோடிப்பதக்கம், பசுமைப்பதக்கம், வெள்ளிப்பதக்கம், தங்கப்பதக்கம் இறுதியாக ஜனாதிபதிப்பதக்கம் என்பன வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

இங்கு நேர்முகபரீட்சைக்கு தெரிவான மாணவர்களை குறித்த பதக்கங்களுக்கு தயார்படுத்துவதில் வழிகாட்டிகளாக ஆசிரியை திருமதி உம்மு ஐமன், மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளரரும் பிரதி அதிபருமான  எம்.ரீ.நௌபால் அலி, நிந்தவூர் அல் – அஷ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.ஜாபீர் மற்றும் நிந்தவூர் சுற்றாடல் உத்தியோகத்தர் கே.எல்.அலி ஹசன் போன்றோரும் செயற்பட்டதாகவும் பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ.சீ.நஜீப் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இங்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் எதிர்வரும் உலக சுற்றாடல் தின நிகழ்வில் அதாவது ஜூன் 5ம் திகதியன்று ஜனாதிபதியால் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Environment Interview_Fotor