தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சுதெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறும் என்றும் இதன் போதுபோக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் கலந்து கொள்ளவுள்ளார் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னரே தொடர்ந்தும் இந்த ஆர்ப்பாட்டத்தைமுன்னெடுப்பது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தண்டப் பணம் அதிகரிப்புக்கு எதிராக தனியார் பஸ்உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளமையினால் பொது மக்கள்போக்குவரத்து குறித்து பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.