கொண்டச்சி முஸ்லிம் வித்தியாலயத்தின் விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்!

 

முசலி கொண்டச்சி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நாளை நடைபெறும் 55 ஆவது ஆண்டு நிறைவு விழா பாடசாலை பரிசளிப்பு விழா மற்றும் மலர் வெளியீட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடை பெற எனது வாழ்த்துக்களை பாடசாலையின் முன்னாள் அதிபர் என்ற வகையில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மன்னார் மாவட்டத்தில் புகழ்ப் பூத்த பிரதேசமான முசலிப் பிரிவிலே அமைந்த பழம்பெரும் கிராமம் கொண்டச்சியாகும். தமிழ்ப் பெரும் புலவரான மர்ஹூம் சரீபுத்தீன் புலவர் (நொண்டிப் புலவரென செல்லமாக அழைக்கப்படுபவர்) அவர்கள் இக்கிராமத்திற்கு அணி செய்தவர். 

தமிழிலே கவி பாடும் திறமையும் புராணங்களுக்கு விளக்கம் சொல்லி விரிவுரை செய்யும் திறமையும் புலவர் பெற்றிருந்தார். தமிழிலே ஆர்வமுள்ள நான் புலவருடன் நெருங்கிப்பழகினேன்.

இந்தக் கிராமத்தின் பலருடைய தமிழ்த்திற்மைக்குப் புலவரின் தமிழ்ப்புலமை பயன்பட்டது.

இங்குள்ள கொண்டச்சி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக பணி புரியும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. கொண்டச்சியில் நான் செய்த கல்விப்பணியை பெரும் பேறாகக் கருதுகின்றேன்.

இங்குள்ள மக்கள் இறை பக்தியும் சன்மார்க்கப் பற்றுமுள்ள திறமைசாலிகள். விவசாயத்தை விருப்புடன் செய்யும் நல்ல உழவர்கள். கால் நடை வளர்ப்பிலும் பிரசித்தி பெற்ற மக்கள். விருந்தோம்பும் பண்புடையவர்கள்.

கொண்டச்சி கிராமம் வளம் பெற வாழ்த்துகிறேன்அல்ஹம்துலில்லாஹ்

வ. முகம்மதுக் காசிம்.

முன்னாள் அதிபர்

img_3211