முஸ்லிம் சமூகத்திற்கு உண்மையை உரைத்ததாலேயை தனது பதவியை இழந்த அதா

முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான அதாஉல்லாஹ் அவர்களுக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உருப்புரிமை வழங்கப்பட இருக்கின்ற செய்தி தொடர்பில் எவ்வித உண்மை தன்மை இல்லை என்பதையும்  இவை தொடர்பில் அவர் ஆவல் கொள்ளவில்லை என்பதையும்
இன்னும் ஊடகங்கள் இவ்வாறன செய்திகளை காலத்துக்கு காலம் தெரிவிக்கின்ற போக்கு யூகங்கள் அடிப்படையிலானதாகும்.

athaullah

தேசிய காங்கிரஸ் தலைமைக்கு தனது பதவியை தக்க வைத்து கொள்ள பல்வேறு பட்ட வழிமுறைகள் கடந்த காலங்களில் இருந்தும் அவற்றுக்கான எந்த வொரு முனைப்பையும் அவர் காட்டவில்லை 
காரணம் கடந்த தேர்தல் காலங்களில் அவர் தான் சார்ந்த சமுகத்துக்கு உண்மைக்குண்மையான நிதர்சனமான பல விடயங்களை சொன்னார் ஆனால சமுகம் தங்களது உணர்வுகளுக்கு முக்கியத்துவமளித்து இவற்றின் பின் இருக்கின்றன பார தூரமான சதிகளை உணராமல் வாக்களித்தது.

இன்று அவர் கூறியவை கண் முன் நிகழ்கின்றது. சமூகம்  அது தொடர்பில் பேச ஆரம்பித்திருக்கிறது. அதாஉல்லாஹ் என்கின்ற ஆளுமைக்கான அதன் வெற்றிடத்தை சமூகம்  உணர்ந்து கொள்ள வேண்டும் அது வரை தேசிய காங்கிரஸின் தலைமை எந்த பதவி நிலைககும் யாருக்கும் சோரம் போகப்போவதில்லை.

தனி மனித ஆளுமையாக பெரும்பான்மையான முஸ்லீம் வாக்குகளை பெறாத
போதும் அவர் சாதித்த விடயங்களை இந்த ஆட்சியில் முழு அளவில் பங்களிப்பு நல்கி பாராளுமன்றம் சென்றவர்களால் நிறை வேற்ற முடியுமா?

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் சுயமாக இவர்களால் சிந்திக்க முடியுமா?
இன முரண்பாட்டு விடயங்களில் எங்கேயாவது இவர்களால் குரலெழுப்ப முடியுமா? 
அதாஉல்லாஹ் செய்த சேவைகளில் எதாவது ஒன்றை உருப்படியாக செய்து காட்ட முடியுமா? 
பொதுபல சேனா அமைப்புக்கெதிராக பாராளுமன்றத்தில் குரலெழுப்ப முடியமா?
வடக்கு கிழக்கு பிரிப்புக்காக துப்பாக்கி ரவைகளை தம் நெஞ்சில் சுமக்க முடியுமா?

இவையெல்லாம் இந்த முல்லீம்  சமுகம் உணராத பட்சத்தில் அதாஉல்லாஹ் அதிகாரம் ஒன்றை பெறுவதில் எந்த ஒரு ஒருமைப்பாடையும் காணமுடியாது. 

அதாஉல்லாஹ் என்கின்ற ஆளுமை முஸ்லீம் சமுகத்துக்கு தேவை என உணர்கின்ற  போது அவரை தொடர்ந்து ஆயிரமாயிரம் போராளிகளும் உண்மை தொண்டர்களும் களம் அமைத்து தளம் புகுவார்கள் என்பதில் ஐயமில்லை.