சர்க்கரைவள்ளிக் கிழங்கு இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது!

japanese-sweet-potatoesசுவையுடன், சத்துக்களும் நிறைந்ததாக உள்ளது, சர்க்கரைவள்ளிக் கிழங்கு. 

ஆனால் இதைச் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதால், உடம்பு எடை அதிகரிக்கும் என்ற தவறான நம்பிக்கை பலருக்கும் உள்ளது. 

ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்புவது போல் தோன்றுகிறது. இது, விரைவில் செரிமானம் ஆகாமல் தடுப்பதால் உடலில் கொழுப்புச் சத்தை சேர்க்கத் தூண்டும் இன்சுலின் சுரப்பு தடுக்கப்படுகிறது. 

உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. 

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஸ்டார்ச் சத்துகள் அதிகமாக உள்ளதால், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது, இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது. 

சர்க்கரைவள்ளிக் கிழங்கு அதிக வைட்டமின்களை கொண்டுள்ளதால், இளமையில் ஏற்படும் முதுமை தோற்றத்தைத் தடுக்கிறது. சுவாசப் பிரச்சினைகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. 

இதில் இரும்பும், மாங்கனீஸும் அதிக அளவில் உள்ளன. நரம்புகள், இதயம், ரத்த நாளம் ஆகியவை சீராகச் செயல்பட இவை உதவுகின்றன. மாங்கனீஸ், மன அழுத்தத்தைக் குறைக்கிறது. 

இது எல்லாவற்றையும் விட முக்கியமாக இதில் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் மிக முக்கிய தாதுப்பொருளாகும். 

சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதால் இதை குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம், அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம்.