மாரடைப்பு ஏற்பட்டவரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஐந்து பேர் பலி!

two-aw189-helicopters-for-falconகச்சா எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகளில் ஈரானும் ஒன்று. ஈரானில் தேசிய ஆயில் நிறுவனம் நடுக்கடலுக்குள் எண்ணெய் எடுக்கும் ஆலையை அமைத்து அதில் இருந்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.

இதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்வார்கள். அப்படி வேலை செய்த ஒருவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அவருடன் மேலும் நான்கு பேர் ஒரு ஹெலிகாப்டரில் மருத்துவமனையில் வந்து கொண்டிருந்தனர்.

ஹெலிகாப்டர் ஈரானின் மத்திய வடக்கு மாகாணமான மசண்டாரன் கிழக்கு கடற்கரை நகரமான பெஹ்ஷாருக்கு காஸ்பியன் கடலில் வந்து கொண்டிருந்தது. அப்போது இந்த ஹெலிகாப்படர் தொழில்நுட்ப காரணமாக செயலிழந்து கடலுக்குள் விழுந்தது.

இதல் ஐந்து பேரம் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறும் உள்ளூர் டி.வி., இந்த வருடம் மசண்டாரன் மாகாணத்தில் நடக்கும் 2-வது ஹெலிகாப்டர் விபத்து இது என்று குறிப்பிட்டுள்ளது