தான் பிறந்த நாட்டுக்கும்,தன்னை உருவாக்கிய சமூகத்திற்கும் தலைமைத்தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று ஞாயிற்றுக்கிழமை தமது 44 வது பிறந்த நாளுக்குள் கால் பதிக்கின்றார் – அது தொடர்பில் ஒரு சிறிய பார்வை
இர்ஷாத் றஹ்மத்துல்லா
ஒரு மனிதன் தன்னை எவ்வளவு தான் பெரியவன் என்று மார்தட்டிக்கொண்டாலும் அவன் அந்த இடத்தினை அடைவதற்கு இறைவனின் நாட்டம் இல்லையென்றால் ஒரு போதும் அது இடம் பெறாது .அது போல் இறைவன் மனிதனுக்கு எதனை கொடுக்க நாடினானோ அதனை வேறு எவராலும் தடுத்துவிட முடியாது .இது உண்மை.
ஏன் இந்த ஆரம்பம் என்று நீஙகள் சிந்திக்கலாம்.வெறுமனே பதவிகளை மட்டும் சிம்மாசனத்தில் வைத்து அழகு பார்ப்பது சிலருக்கு அளாதி பிரியம்.அவர்களது இறுதி எண்ணமும் அதுவாகத்தான இருக்கலாம்.ஆனால் பதவிகளையும்,பட்டங்களையும் பெற்றுக்கொண்டவர்கள் அதனை சமூகத்திற்காக பயன்படுத்துவதும் உண்டு.அந்த பட்டியலில் அமைச்சராக இருக்கின்ற றிசாத் பதியுதீன் அவர்களையும் நாம் உள்ளடக்கி அவரது நீண்டகால வாழ்வுக்கும்,மன தளராத சமூகத்தின் பற்றுக்காகவும் இன்றைய நாளில் பிரார்த்திப்போமே….ஆமீள்
1972 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 27 ஆம் திகதி மன்னார் தாராபுரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் தான் நாம் பிரார்த்திக்க கோறும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமாக இருக்கின்ற றிசாத் பதியுதீன் அவர்கள்.இன்றைய நாள் தான் அவரது பிறந்த நாளாகம்.தன்னுடைய 44 வது வயதுக்குள் தடம் பதிக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கடந்த கால பணிகளை புடம் போட்டு காட்டுவது அவர் இந்த நாட்டு முஸ்லிம்,தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு ஆற்றியுள்ள அளப்பறிய பணிகளை பட்டியலிட முடியாது.அந்தளவுக்கு அவரது பணிகள் பரந்து சென்றுள்ளது.இதற்கு ஒரு சான்றாக உலக முஸ்லிம்களின் தரப்படுத்தலில் அமைச்சர் றிசாத் பதியுதீனும் அதில் உள்வாங்கப்பட்டதை நினைவுபடுத்துவது பொருத்தமாகும்.
இலங்கை அரசியலில் அகதி முகாமில் இருந்து தமது பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தை ஆரம்பித்தவர் தான் அப்துல் றிசாத் பதியுதீன்,அப்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவியாக இருந்த சந்திரிக்கா குமாரணதுங்க அவர்களின் தலைமையின் கீழ் அக்கட்சியின் உறுப்பினராகவும்,கட்சியின் முஸ்லிம் பிரிவின் உறுப்பினராகவும்,மத்திய குழு உறுப்பினராகவும் இருந்து வன்னி மாவட்ட மக்களது குரலாக ஒலித்திருந்தமையை பலர் அறியமாட்டார்கள்.கடும் யுத்த சூழ் நிலைமட்டுமல்ல,இடம் பெயர்வின் கொடூரம் என்வைகளை நேரடியாக அனுபவித்தவன் தான் றிசாத் பதியுதீன் என்பது பலருக்கு தெரியாத உண்மையாகும்.இன்று அமைச்சர் றிசாத் பதியுதீனை விமர்சிக்கின்றவர்கள் அவரது உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்கள் என்பதை இந்த தருணத்தில் சொல்லியாக வேண்டும்.
மாட மாளிகைகளிலும்,சொகுசு வாழ்வினையும்,பட்டினியினையும்,பிணியினையும் அறியாதவர்கள் இன்று அள்ளிவீசும் வித்தியாசமான கருத்துக்களை ஜீரணிக்கும் மனத் துணிவினையும்.இஹ்லாஸையும் அல்லாஹ் அவருக்கு கொடுத்துள்ளான் என்பதை அவருடன் நெருக்கமாக பழகும் எவரும் நன்கு அறிவார்கள்.வெறமனே பணத்துக்கும்,பதவிகளுக்கும்,பிரதேச வாத்திற்கும் அடிமைப்பட்டவர்கள் ஒரு போதும் இதனை ஏற்றுக்கொள்ளமட்டார்கள் என்பதும் அறியாதவடயமல்ல.இது தான் இயற்கையின் நியதி என்று கூறி கூறி நாம் காலத்தை கடத்த முடியாது.கடிகாரத்தின் முற்கள் 24 மணித்தியாலங்கள் தான் ஒரு நாளுக்கு என்று கூறினாலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் பணிகள் அதனையும் தாண்டி பன்மடங்கானது.இதனால் சிலர் விடிந்தெழும்பியதும் தட்டுத்தடுமாறுவது புரிகின்றது ஏனெனில் 24 மணித்தியாலயங்களில் அவர்கள் சமூகத்திற்காக எத்தனை மணித்தியாலயங்களை தியாகம் செய்திருக்கின்றார்கள் என்ற உண்மையினை உணர்ந்து கொள்கின்றனர்.
இவ்வாறு தமது காலத்தினை செலவழித்துவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் நேர்மையான அரசியல் செயற்பாடுகளால் கவரப்பட்ட நாட்டின் ஜனாதிபதிகள் பல முக்கிய அமைச்சுப் பதவிகளை அவருக்கு வழங்கினர்.அதனை அவர் திறம்பட செய்து காட்டியுள்ளதுடன்,இந்த நாட்டினது அபிவிருத்திக்காக அவர் செய்துள்ள பணிகள் எண்ணிலடங்காது.
இந்த அமைச்சரின் பணிகளை சமூகத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளதுடன்,அவர் அணியில் நின்று தமது உரிமைகளை பெறுவதோடு,ஏனைய சமூகத்தின் மறியாதையினையும் பாதுகாக்கும் செயற்பாடுகளுக்கும் தலைமை தாங்கும் இந்த தலைமை எமது சமூகத்திற்கு அவசியமானது என்பதை தெரிவித்தும் வருகின்றனர்.
குறிப்பாக வடக்கின் பாராளுமன்ற பிரதி நிதியாக இருந்த போதும்,அதனையும் கடந்து மனித நேயத்துடன், நாடு பூராகவும் மக்களது தேவைகளை நிறைவு செய்து கொடுக்கும் ஒரு தலைவராக இன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் பார்க்கப்படுகின்றார்.அப்டியானதொரு தலைமைத்துவத்தை எமது மக்கள் பெற்றுள்ள போது அதனை பாதுகாத்து தமது சமூகத்தின் உரிமைகளையும்,பாதுகாப்பினையும்,இருப்பையும் தக்க வைத்துக் கொள்வது காலத்தின் தேவையாகும்.
தமது 44 வது அகவையில் தடம் பதிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அமைச்சருமான அல்-ஹாஜ்.றிசாத் பதியுதீன் அமது வர்களுக்கு எமது வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன்,அவரது சமூகப் பணி தொடர அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்வோம்