உலகப்புகழ் வாய்ந்த ‘ஈபிள் டவரின்’ 14 இரும்பு படிக்கட்டுகள் சுமார் 4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டன !

OLYMPUS DIGITAL CAMERA
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ‘ஈபிள் டவர்’ கட்டுமானம் 1887ல் துவங்கப்பட்டு 1889ல் முடிக்கப்பட்டது. 1983ல் ‘லிப்ட்’ வசதி செய்யப்பட்டதால், இரும்பிலான படிக்கட்டுகள் வெட்டி எடுக்கப்பட்டன. இதன் பெரும் பகுதி, பாரிசில் உள்ள அருங்காட்சியகம் வாங்கியது. 1983ம் ஆண்டில் இருந்து அவ்வப்போது, இதற்கான ஏலம் இங்கு நடத்தப்படுகிறது.

சமீபத்தில், ‘ஈபிள் டவரின்’ 14 படிக்கட்டுகள் ஏலம் விடப்பட்டன. இதற்கு சர்வதேச அளவில் கடும் போட்டி காணப்பட்டது. ரூ. 15 லட்சத்தில் துவங்கிய ஏலம், ரூ. 3.80 கோடியில் முடிந்தது. இதற்கு முன் 2013ல் நடந்த ஏலத்தில் 19 படிகள் 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
ஏலத்தை நடத்திய பிரான்கோயஸ் டாஜன் கூறுகையில்,” தொலைபேசியிலும் ஏலம் எடுக்க கடுமையான போட்டி நடந்தது. பிரான்ஸ் நாட்டின் பாரம்பரியத்தின் மீதான ஆர்வத்தை இது காட்டியது,” என்றார்.