முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜயத்தின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே உள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜயம் தொடர்பல் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ஷவின் மீது ரணில் அளவு கடந்த அன்பும் அக்கரையும் உள்ளது. அவரது சகல தேவைகளையும் பிரதமர் தயங்காது செய்து கொடுக்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையிலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சகல சலுகைகளும் வழங்கப்படும் என பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதே போல் மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜயத்திற்கு சகல ஏற்பாடுகளையும் ரணில் விக்ரமசிங்கவே மேற்கொண்டுள்ளார்.
எனவே இருவரும் நல்ல உறவை கையாண்டு வருகின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.