தற்போது இலங்கை அரசியலில் அதிகம் உச்சரிக்கப்படுகின்ற வார்த்தை மஹிந்த ராஜபக்ச என்பதே, இவர் ஆட்சி மாற்றத்திற்காக பல விதமான சதிகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன.
மேலும் புதுக்கட்சி தொடர்பில் முன்னுக்கு பின் முரண்பாடான கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று மஹிந்த ராஜபக்ச ஜீ.எல். பீரிஸ் சகிதம் சீன விஜயத்தினை மேற்கொண்டார்.
சீன அரசு மஹிந்தவிற்கு அதிக அளவான வரவேற்பு கொடுத்ததோடு விஷேட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
அதனைத் தொடர்ந்து இன்றை தினம் பலத்த பாதுகாப்புடன் மஹிந்த பௌத்த வழிபாட்டு தலங்களுக்கு சென்றதோடு பலவிதமான வழிபாடுகளில் கலந்து கொண்டு, சீனாவில் விஷேட உரைகளையும் நிகழ்த்தியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் பௌத்த பிக்குகள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர், பௌத்தம் இலங்கையில் அழிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது.
அதேபோன்று மஹிந்தவின் சகோதரர்களுக்கு இடையிலேயே மோதல்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ச சீன நாட்டின் பௌத்த வழிபாட்டு தலங்களை சுற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.