ஒரு துப்பாக்கி வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற சலுகையில் ஆயுதம் வழங்கும் ரஷ்யா : அதிபர் ரோட்ரிகோ

பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் அமெரிக்காவிற்கு இடையே நீண்ட காலமாக சுமூகமான உறவு இருந்து வந்தது. பிலிப்பைன்ஸ் அதிபராக ரோட்ரிகோ டுடெர்டி பொறுப்பேற்ற பின்பு, அவர் அமெரிக்காவிடம் இருந்து விலகும் போக்கை கையாண்டு சீனாவுடன் அதிக நெருக்கமான உறவை கடைபிடிக்க தொடங்கினார்.

அமெரிக்கா உடனான உறவை முறித்துக் கொள்வதாகவும் அதிபர் ரோட்ரிகோ வெளிப்படையாகவே அறிவித்தார். அப்போது, பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக குற்றம்சாட்டினார். 

இந்நிலையில், ஒரு துப்பாக்கி வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற சலுகையில் ரஷ்யா தங்கள் நாட்டிற்கு ஆயுதங்கள் வழங்குவதாக அதிபர் ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.

பெருநாட்டில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய போது இதனை அவர் தெரிவித்தனர்.

அதிபர் ரோட்ரிகோ கூறுகையில்:-

201609061038018501_Obama-cancels-meeting-with-Philippines-President-Duterte_SECVPF

லிமா நகரில் நடைபெற்ற மாநாட்டின் போது பிலிப்பைன்ஸூக்கு சலுகை விலையில் துப்பாக்கிகள் விற்பனை செய்ய ரஷ்யா தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் என்னிடம் தெரிவித்தார்.

ரஷ்யாவிடம் இருந்து எப்பொழுதும் துப்பாக்கிகள் வாங்க முடியும். அமெரிக்கா எங்களுடன் கூட்டு வைத்திருக்க விரும்பவில்லை என்றால் நாங்கள் சீனா, ரஷ்யாவிற்கு செல்வோம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.