16 வருடங்களாக ஹக்கீமினால் ஏமாற்றப்பட்டு வரும் கிழக்கு மாகாண முஸ்லீம் மக்கள் !!

மு.கா. உயர்பீட உறுப்பினர்களே ‘கெபினட் அமைச்சு’ கிழக்குக்குறியது என நீங்கள் உணர வேண்டும்
கிழக்கு மாகாண முஸ்லீம்களின் சுயாட்சிக்கும், கெபினட் அமைச்சுக்கும் ஹக்கீம் தடை

slmc baheer , rauff hakeem hasan ali

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்தில் இருப்பவர்களின் அறிவிற்கும், பலவீனத்திற்கும் ஏற்ப ஹக்கீமின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றார்கள். ஆனால்; தொடர்ந்து பிரச்சனையாக இருக்கின்ற சிலரை வெளியேற்ற ஒரு சந்தர்ப்பம் ஹக்கீமுக்கு தேவைப்படுகிறது. பொதுச்செயலாளர், அன்சில், தவிசாளர், தேசிய அமைப்பாளர், கலீல் மௌலவி, இல்யாஸ் மௌலவி, போன்றவர்களை கட்சியை விட்டு வெளியேற்றினால் மற்றவர்கள் தானாகவே அடங்கி விடுவார்களென ஹக்கீம், தேசியப் பட்டியலை அல்லது ஏதொ ஒன்றை முன்னால் காண்பித்து பின்னால் முதுகில் குத்தி, கட்சியை விட்டு வெளியேற்ற தினமும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். கிழக்கு வாழ் உயர்பீட, கட்சிப் போராளிகளினால் ஹக்கீம் இரு தடவைகள் தலைவராக்கப்பட்டும் இவர்களுடனான முரண்பாட்டினை ஹக்கீமினால் தீர்க்க முடியவில்லை

 

பயங்கரவாத, இனப்பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு முஸ்லீம்கள் எமக்கு விடிவு காலமில்லையா? என தவித்துக் கொண்டிருந்த போது, மர்கூம் அஷ;ரப் அவர்களினால் ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ எனும் மக்களின் குரல் ஒலித்ததோடு, மக்களின் துன்பங்களை துடைக்கவும் போராடியது. மக்களும் இக்கட்சியை உயிராக நினைத்து இன்றும் வளர்த்து வருகிறார்கள், கிழக்கிலேயே அதிக மக்களின் ஆதரவுடன் முஸ்லிம் காங்கிரஸ் கொடிகட்டிப் பறக்கிறது. இலங்கையிலே 6 லட்சத்திக்கும் அதிகமான முஸ்லீம்கள் குவிந்து வாழும் கிழக்கு மாகாணமே முஸ்லிம் காங்கிரஸின் தாயகமாக காணப்படுகிறது. இந்த முஸ்லீம்களின் பெரும்பான்மையின் அடிப்படையில் எமது தாயகத்தை கிழக்கின் மகனே ஆழ வேண்டும் என்ற நோக்கில் கரையோர மாவட்டம் எனும் கோறிக்கை மர்கூம் அஷ;ரப் அவர்களினால் முன்வைக்கப்பட்டது. இவ்வாறு முக்கியத்துவம் பெற்ற இந்த கிழக்கு மாகாணம் தொடர்பாக முறுகல் நிலைக்கான முக்கிய காரணம் ‘கெபினட் அமைச்சாகும்’ அதிக முஸ்லீம்கள் வாழும் கிழக்கின் ஒருவருக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக ‘கெபினட் அமைச்சு’ கிடைக்க வேண்டும் என்பதே முறுகளுக்குறியவர்களது வாதமும், முரண்பாடுமாகும்;. ஆரம்பத்தில் அதாவுல்லா, ஹரீஸ், அன்வர் இஸ்மாயில், அஸீஸ் போன்றவர்கள் ஹக்கீமை ஏற்றுக் கொள்ளாமல் சென்றதுக்கு இதுவே அடிப்படைக் காரணமுமாகும் ஏனென்றால் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கின்ற ‘கெபினட் அமைச்சு’ கிழக்கு மாகாணத்திற்கு சொந்தமானது, தலைவர் பதவியை மட்டுமே ஹக்கீமுக்கு கொடுத்தோம் கெபினட் அமைச்சினையல்ல, ஆனால் இன்னொருவர் கெபினட்டிற்கு வந்தால்; தனது தலைவர் பதவி தானாகவே பறிபோய்விடுமென பயந்து ‘கெபினட் அமைச்சினை’ வைத்துக் கொண்டு, தலைவர் பதவியை பாதுகாக்க 16 வருடங்களாக ஹக்கீம் முயற்சித்ததுடன், கிழக்கு மாகாண முஸ்லீம்களை முற்றாகப் புறக்கணித்ததோடு ஏமாற்றியும் வருகிறார்;.

 

‘ஒரு உறையில் ஒரு கத்தி’ எனும் தொணியில் ‘கெபினட் அமைச்சுக்கு’ நான் மாத்திரமே என ஹக்கீம் சொன்னதன் பின்பு தான் அதாவுல்லா, ஹரீஸ், அன்வர் இஸ்மாயில், அஸீஸ் போன்றவர்கள் கிழக்குக்கு ஒரு ‘கெபினட் அமைச்சு’ கிடைத்தால் தலைவர் பதவி ஹக்கீமை விட்டு போய்விடும் என்று பயந்துள்ள, தர விரும்பாத ஹக்கீம் அவரது தலைவர் பதவியை பாதுகாக்கும் நோக்கில் கரையோர மாவட்டத்தினை பெற்றுத் தரவும் மாட்டார், வடக்கில் இருந்து கிழக்கை பிரிய விடவும் மாட்டார் என சொல்லிவிட்டுத்தான் சென்றார்கள். இதன் மூலம் ஹக்கீம் எந்தளவுக்கு பதவியாசையில் வெறிபிடித்து அலைகின்றார் என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஹக்கீமுக்கு பிரதமர் பதவி கிடைக்குமாயின் பௌத்த மதத்திற்கு மாறவும் தயங்கமாட்டாரென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. மாயக்கல்லிமலையில் புத்தர் சிலை வைத்தால் ஹக்கீமுக்கு என்ன? ஹக்கீமுக்கு தேவை பணம், பதவி, பட்டம் மாத்திரமே. ஹக்கீம் போன்ற கழுதைக்கு தெரியுமா? கிழக்கின் மண் வாசனை. உண்மையில் ‘கெபினட் அமைச்சு’ கிழக்குக்கு கிடைத்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம், சாதித்திருக்கலாம். இந்த விடயத்தில் கிழக்கு மாகாண மக்கள் அப்பாவிகளாகி விட்டார்கள்.

 

முஸ்லிம் காங்கிரஸில் 27 உயர்பீட உறுப்பினர்களில் பெரும் பான்மையைக் கொண்டு அதாவுல்லா போன்றவர்கள் ஹக்கீமை தலைமைத்துவத்திலிருந்து இறக்கிவிட முயற்சித்த போது, அன்று புத்தளம் பாயிஸின் தலைமையில் ஹாஜி போன்ற பாதாள உலக குழுக்கலுடன் சேர்ந்து ஆயுதங்களை காட்டி இம்முயற்சியை தடுத்தனர். அத்துடன் இன்று ஹக்கீமினால் துரத்தப்படுகின்றவர்கள் தான் அன்று இச்சூழ்ச்சியை முறியடித்து ஹக்கீமின் தலைவர் பதவியை பாதுகாத்து இரண்டாவது தடவையும் கொடுக்கும் போது சூழ்ச்சிக்காரர்களை பார்த்து ‘மர்ஹும் அஷ;ரப் அவர்களின் வழியில் சூழ்ச்சிகளுக்கு இடமில்லை, கட்சியை விட்டு பிரிந்து செல்லாது உள்ளே இருந்து கொண்டு தான் போராடவேண்டும்’ என சொன்னவர்களுக்கே ஹக்கீம் இன்று ஆப்பு வைத்தது மட்டுமல்லாது, எதிர் காலத்தில் இச்சூழ்ச்சிகளை தடுக்கும் வகையில் 27 ஆக இருந்த உயர்பீட உறுப்பினர்களின் எண்ணிக்கையினையும் 90 ஆக அதிகரித்ததுடன் தற்போது ஏதாவது பிரச்சனைகள் வந்தால் அதற்கு முகம் கொடுக்கவே இன்று புத்தளம் பாயிஸினையும் உள்ளே கொண்டுவந்துள்ளார்.

 

ஹக்கீமின் முறையற்ற வேலைகளுக்கு தடையாகவும், தவறுகளை தைரியமாக தட்டிக் கேட்பவராகவும். இருந்த ஹசனலி மக்களையும், காணி, சமூக, பொருளாதார, பிரதேச, உரிமை ரீதியான பிரச்சனைகளையும், கரையோர மாவட்டத்தினையும் மறந்து ஹக்கீம் வழமையான ராஜவாழ்க்கையில் இருப்பதை ஏற்றுக் கொள்ளாது மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சனைகளை எடுத்துக் கூறி வாதிடுவார் ஆனால் இது தொடர்பான தகவல்;களை மறைத்து, கட்சியின் பல்லைக் குற்றி ரகசியமான நாற்றங்களை வெளியிடுவதையும் தவிர்த்துக் கொண்டார். இந்த ஆண்டின் பெரிய கோமாளி பழீல் பீ.ஏ முகப் புத்தகத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவுக்கு முன் ஹசனலியை இரு நாட்கள் காணவில்லையென கூறியுள்ளார். ஹக்கீம் கிழக்கு மாகாணசபை தேர்தலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டியிட தயாராகி விட்டதனை தெரிந்து கொண்ட ஹசனலி முஸ்லிம் காங்கிரஸிற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்குமான 4 பக்க  உடன்படிக்கை ஒன்றினை எழுதி உயர்பீடக் கூட்டத்தில் ஒப்படைத்தார். ஆனால் இரு நாட்களின் பின் உயர்பீடம்; கூடிய போது அது ஒரு பக்கமாக சுருக்கி காணப்பட்ட நிலையில் ஹசனலி கையொப்பமிட முடியாது என மறுத்துவிட்டார். அதன் எதிரொலிதான் இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து களமிறங்கியது, அன்று ஹசனலி இரு நாட்கள் இல்லாததன்; விளைவுதான் இன்று முஸ்லிம் காங்கிரஸில் ஒருவர் முதலமைச்சரானார்;. ஹசனலி தமிழ் கூட்டமைப்புடன் பல சிரமங்கங்களுக்கு மத்தியில் பேசி, எவ்வளவு கஷ;டப்பட்டு அவர்களின் ஆதரவை பெற்று ஹாபிஸ் நஸீரை முதலமைச்சராக்கினார் என்பது ஹாபிஸ் நஸீருக்கும் தெரியும்.

 

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவே ஹசனலி தயாராக இருந்தார். ஆனால் ஹசனலியிடம் தந்திரமாக பேசி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தினை மாற்றியமைத்து கட்சியின் தேசியப்பட்டியலில் பெயரையிட்டனர். இந்நடவடிக்கையின் போது சிறிதளவு சந்தேகம் இருந்ததுடன் நாள் செல்லச்செல்ல பேச்சுக்களும், நடவடிக்கைகளும் ஹசனலிக்கு பாராளுமன்றம் போகக்கிடைக்காது என்ற சந்தேகத்தினை தேர்தலுக்கு முன்பே உறுதிப்படுத்தியதோடு, தன்னைச்சுற்றி சதிவலையொன்று பின்னப்பட்டுள்ளதை உணர்ந்தார். காரணம்; நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஹக்கீம் மகிந்தவுக்கு ஆதரவளிக்க கிளம்பிட்டாரு. ஆனால் ஹசனலி, உயர்பீட உறுப்பினர்கள், எமது போராளிகள், முஸ்லீம்கள் அனைவரும் ஆரம்பத்திலிருந்தே மைத்திரிக்கு ஆதரவளித்தபடியால்;. ஹக்கீம் எல்லாம் அவரது கையைவிட்டு போய்விட்டதை உணர்ந்து இறுதி ஒரு கிழமைக்கு முன் ஹசனலியுடன் வந்து இணைந்தார். இதனால் புதிய மைத்திரி ரணில் அரசில் ஹசனலிக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதுடன் கெபினட் அமைச்சினையும் வழங்க தீர்மாணிக்கப்பட்டது, இருந்தும் ஹசனலி இந்த ‘கெபினட் அமைச்சினை’ கட்சி தலைவர் என்ற அடிப்படையில் ஹக்கீமுக்கு மாற்றிக் கொடுத்தார். இதன் காரணமாக ஹக்கீம் ஹசனலியை கண்டு பயப்பட வேண்டிய நிலை உருவானது. மேலும்; மைத்திரி ரணில் அரசில் ஹசனலிக்கு ஹக்கீமை விட மரியாதையும் மதிப்பும் அதிகமாக காணப்பட்டதால் தேர்தலில் வெற்றி பெற்றால் கிழக்கினைச் சேர்ந்த ஹசனலிக்கு ‘கெபினட் அமைச்சு’ கிடைக்கும் பட்சத்தில் முஸ்லிம் காங்கிரஸிக்கு தலைவராகிவிடுவார் என்ற பயத்தினாலயே ஹசனலியை தேர்தலில் போட்டியிடாது தடுத்ததுடன், செயலாளர் பதவியில் இருந்தும் தூக்கினார்;. கடுகஸ்தோட்டையில் நடைபெற்ற பேராளர் மகாநாட்டில் கட்சியின் உயர்பீடத்திற்கான சம்பளம் பெறும் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட மன்ஸூர் ஏ காதரின் பெயர் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் என கட்சி மேடைகளிலும், பல உத்தியோகபூர்வமான இடங்களுக்கும் ஆவணமாகவும் அறிவிக்கப்பட்டதனை பாராளுமன்ற உறுப்பினர் சல்மான், ஹக்கீமிக்கும், ஹசனலிக்கும் முன்பாக வைத்து உறுதிப்படுத்தியுள்ளார். மன்ஸூர் ஏ காதரை பெயரளவில் வைத்துக் கொண்டு தற்போது கட்சியின் செயலாளராகவும் ஹக்கீம் சர்வதிகார போக்கில் செயற்படுவதுடன் கிழக்குக்கு ‘டாட்டாவும்’ காட்டுகிறார்.

 

மர்கூம் அஷ;ரப் அவர்களுடன் இனைந்து இக்கட்சியினை உருவாக்க பல தியாகங்களை செய்து மிகக்கடுமையாக உழைத்தவர் என்ற வகையில் இக்கட்சிக்கு ஹக்கீமை விட ஹசனலி அதிக உரிமையுடையவர் என்பதால் கிழக்கு மாகாண மக்கள் ஹக்கீமின் இச்செயலை என்றுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஹக்கீம் தேசியப்பட்டியலை பெற்றுக் கொள்ளுங்கள் என பல தூதுவர்களை அனுப்பியும் ஹசனலி வேண்டாமென கண்டிப்பாக மறுத்துக் கொண்டிருக்கிறார். கட்சியினை மர்கூம் அஷ;ரபுடன் சேர்ந்து உருவாக்கியவருக்கு அதன் சொந்தக்காரனுக்கு ஹக்கீம் பிச்சை போட நினைக்கிறார். ஹக்கீமுக்கு இரு தடவைகள் இந்த தலைவர் பதவியை ஹசனலி கொடுத்துள்ளார் என்பதையும் ஹக்கீம் மறந்து கிழக்கு மாகாண மக்கள் ஒரு ‘கெபினட் அமைச்சினை’ பெறுவதை தடுக்கின்றார்.

 

தவிசாளர் பஸீர் சேகுதாவூத் ஹக்கீமுக்காக தனது பெயரையே நாசமாக்கிக் கொண்டவர். பஸீர் சேகுதாவூதின் பேச்சினைக் கேட்டுத்தான் ஹக்கீம் இப்படியெல்லாம் நடக்கின்றார், அவரின்; கட்டுப்பாட்டில் தான் ஹக்கீம் உள்ளார் என ஊரெல்லாம் பேச்சு. ஹக்கீம் அப்படியொரு மாயையை உருவாக்கியிருந்தார் ஆனால் பஸீர் சேகுதாவூதிடம் கேட்டு ஹக்கீம் கை நீட்டவுமில்லை, குமாரியுடன் குடும்பம் நடத்தவுமில்லை. உண்மையில் இளநீர் குடிப்பது ஹக்கீம் குறும்பை சுமப்பது பஸீர் சேகுதாவூத். ஹக்கீமின் விடயங்களை பஸீர் சேகுதாவூத்தின் மூலமாக அல்லது பெயரை பாவித்து ஹக்கீம் செய்து கொள்வார். உதாரணமாக வட மாகாண முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டவர்களையும் கொண்டு போய் மகிந்தவுடன் சேர்க்க பஸீர் சேகுதாவூத்திற்கு ஹக்கீம் கட்டளையிட்டார் ஆனால் அதன் பழிகள் வழமை போல் பஸீர் சேகுதாவூத்தின் மேல் வந்து விழுந்தது. ஹக்கீம் தனிப்பட்ட சுயநல முறையில் இயங்குவதையும், அவரது தலைமைத்துவத்தில் காணப்பட்ட குறைபாடுகளையும், பெண்கள் நோக்கிய மனச்சஞ்சலத்தையும் திருந்தி ஹக்கீமை ஒரு கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவர வேண்டுமென நினைத்து பஸீர் சேகுதாவூத் ‘கெபினட் அமைச்சினை’ பெற்று ஹக்கீமுக்கு ‘அலர்ஜிக்கை’ ஏற்படுத்தயதுடன், கிழக்கு மாகாண மக்களையும் அவர்களுக்கு சொந்தமான ‘கெபினட் அமைச்சினையும்’ நினைவூட்டினார். இதன் காரணமாக நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பஸீர் சேகுதாவூதை ஹக்கீம் போட்டியிடாது தடுத்து தேசியப்பட்டியலில் தருவதாக தனது தாயின் முன் வாக்களித்தார். இதற்கு காரணம் பஸீர் சேகுதாவூத் தேர்தலில் வெற்றி பெற்று கெபினட் அமைச்சராகிவிட்டால் ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கு பிரச்சனையாகிவிடும் அல்லது ஒரு உறையில் இரு கத்தி என்றால் கிழக்கு மாகாணத்தின் கத்தி கூறாகிவிடும் என்ற பயத்தினால் பஸீர் சேகுதாவூதை தேர்தலில் போட்டியிடாது தடுத்து கட்சியை விட்டு வெளியேற்றுவதிலேயே ஹக்கீம் குறியாக இருந்தார்.

 

ஹக்கீமின் திட்டத்தின்படி பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, சிப்லி பாருக், ரியால். போன்றோர்கள் பஸீர் சேகுதாவூத் தேர்தலில் களமிறங்கினால் நாங்கள் களமிறங்க மாட்டோம் என்றனர். ஆனால் உண்மையில் பஸீர் சேகுதாவூத் தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தேர்தலில் போட்டியிட இவர் மாத்திரமே தகுதியாகவும் இருந்தார் மற்றவர்கள் புதிதாகவும், வேறு கட்சிகளிலும் இருந்து வந்தவர்கள். முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் களமிறங்கியபடியால் பஸீர் சேகுதாவூதும் சேர்ந்து போட்டியிடுவதன் மூலமாக எவருக்கும் எந்தப் பாதிப்புமில்லை. எமது கட்சிக்கு கிடைக்கும் வாக்கின் அளவு இன்னும் அதிகரித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களிலும் மாற்றம் ஏற்படும் அல்லது அமீரலி தோற்கடிக்கப்பட்டு யுஊஆஊ யின் பலம் குறையும் என்று தெரிந்தும் ஹக்கீம் இந்த நாடகத்தினை நடத்தியதுடன் பஸீர் சேகுதாவூதின் அரசியலை சவப் பெட்டிக்குள் போட்டு மூடி மேலே ஹாபிஸ் நஸீரெனும் ஆணியையும், கீழே அலி சாகிர் மௌலானா எனும் ஆணியையும் அடித்து புதைக்கப் பார்க்கிறார். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’; அளவுக்கு அதிகமாக ஹக்கீமை நம்பியதால் தான் இந்நிலை என்பதனை இனியாவது பஸீர் சேகுதாவூத் புரிந்து கொள்ள வேண்டும்.

 

தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் ஹக்கீமைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பவர் முஸ்லிம் காங்கிரஸிக்காக தனது வியாபாரத்தினை, சொத்துக்களை அனைத்தையும் செலவிட்டவர். தன்னைவிட அதிக செல்வாக்கினை கொழும்பு மக்களிடம் எவரும் பெற்றுவிடக் கூடாது என்பதில் மிகவும் குறியாக இருந்த ஹக்கீம், சபீக் ரஜாப்டீனையும் கட்சியை விட்டு வெளியேற்ற திட்டமிட்டார். கொழும்பு மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச்சின்னத்தில் போட்டியிட சபீக் ரஜாப்டீன்; தயாராக இருந்த நிலையில் நிராகரிக்கப்பட்டார். இதற்கு ஹக்கீம் சொன்ன பதில் ‘ரணில் விக்ரமசிங்க மறுத்துவிட்டார்’ என ஆனால் சபீக் ரஜாப்டீன் நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் அல்லது சுயேற்சையில் போட்டியிட தயார் என்ற போது அதையும் தடுத்த ஹக்கீம் கொழும்பு மாவட்டத்திற்காகவும் சேர்த்து கிடைக்கின்ற தேசியப்பட்டிலில் சபீக் ரஜாப்டீனுக்கும் தருவதாக வாக்குறுதியளித்து, தேசியப்பட்டிலில்; பெயரையிட்டார்;. மேலும் சபீக் ரஜாப்டீன் உட்பட கொழும்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அனைவரும் ரணில் விக்ரமசிங்க அதிக விருப்பு வாக்குடன் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றார். அதற்கமைய ரணில் விக்ரமசிங்க சபீக் ரஜாப்டீனை அசேல விக்ரமசிங்கவுடன் சந்தித்த ஒரு சந்தர்ப்பத்தில் ‘கொழும்பு மாவட்டத்தில் நீங்கள் ஏன் போட்டியிடவில்லை’ என்று கேட்ட போதுதான், சபீக் ரஜாப்டீன் ஹக்கீமால் ஏமாந்த விடயம் தெரியவந்தது. அன்மையில் இடம்பெற்ற கொழும்பு மாவட்டக் கூட்டத்தில் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவியை சபீக் ரஜாப்டீனிடமிருந்து எனக்குத் தாருங்கள் என ஹக்கீம் வெளிப்படையாக கேட்டுள்ளார். காரணம் தொகுதி ரீதியான தேர்தலுக்கு கண்டியில் ஹக்கீமுக்கு தொகுதியுமில்லை, களமுமில்லை, வாக்கு வங்கியுமில்லை ஆனால் கொழும்பு மாவட்ட மத்திய தொகுதியில் அது காணப்படுகிறது. அதனால் தான் சபீக் ரஜாப்டீனை பல விடயங்களில் புறந்தள்ளி, இனி அரசியல் எதிர்காலமே இல்லாதபடி செய்து விட்டு, கொழும்பை ஹக்கீம் கைப்பற்ற அர்சாட் நிஜாம்டீனின், அனாஸ் போன்றவர்களின் உதவியுடன் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்; என்பது சகலரும் அறிய வேண்டிய உண்மையாகும்.

 

அன்சில் மற்றும் சிலரின் உதவியுடன் ஹக்கீமின் ஏற்பாட்டில் பாலமுனையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் மகாநாட்டில் ஜனாதிபதியும், பிரதமரும் மேடையில் இருந்த சந்தர்பத்தில் ஹக்கீம் பேசும் போது கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரு கெபினட் அமைச்சினை கேட்டிருக்கலாம், கரையோர மாவட்டத்தினை கேட்டிருக்கலாம், ஒழுவில் துறைமுகத்துக்கு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நஷ;டயீட்டினை கேட்டிருக்கலாம், சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களுக்கான பிரதேச சபைகளை கேட்டிருக்கலாம், பரிபோகும் முஸ்லீம்களின் காணிகளைப் பற்றி கேட்டிருக்கலாம், ஆனால் இதற்கு மாறாக ஜனாதிபதியும், பிரதமரும் ஹசனலி மேல் வைத்திருந்த மதிப்பையும், மரியாதையும் விட அதிகமான மதிப்பையும் மரியாதையும் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் பெற்றுக்; கொள்ள வேண்டுமென ஹக்கீமினால் அரங்கேற்றப் பட்ட ஒரு நாடகமே பாலமுனை மகாநாடாகும். இந்த விபரம் அன்சிலுக்கு பின்பு தான் புரிந்ததுடன் ஹக்கீமின் ஏனைய பிழைகளும் அன்சிலின் கண்களுக்கு தெளிவாகவும் தெரிந்தது, ஆனால் இதுவரை அன்சிலின் எந்த கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்காத ஹக்கீம், அதிகமாக கேள்வி கேட்ட அன்சிலையும் வெளியேற்றப்படுபவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளார். வாய் திறந்தால் வெளியே எனும் ஹக்கீமின் யாப்பின் பிரகாரம் உயர்பீட உறுப்பினர்கள் வாய் திறக்க யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். (எழும்புத் துண்டுகளுக்காக மாத்திரம் வாய் திறக்கலாம்) இவ்வாறு இவர்களை கட்சியை விட்டு வெளியே போட்டால் ஏனைய உயர்பீட உறுப்பினர்களை இலகுவாக கட்டுப்படுத்தி தொடர்ந்து தலைவராக வாழலாம் என போட்ட திட்டம் இன்று தோல்வியடைந்துள்ளதுடன் பல ரகசியங்களும் அம்பலமாகியுள்ளது, இன்று கிழக்கில் முன்பு போல் ஹக்கீமினால் கால் பதிக்க முடியாத நிலை, ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. என்பதை ஹக்கீமின் தோற்றுப் போன திட்டம் அல்லது ஹசனலியின் விடயத்தில் அவசரப்பட்டு விட்டேன் என்ற பேச்சு ஹக்கீமுக்கு உணர்த்தியுள்ளது எனலாம்.

 

பஸீர் சேகுதாவூத், ஹசனலி போன்றோர்கள் மர்கூம் அஷ;ரப் அவர்களின் இதயத்தில் இருந்தார்கள். பஸீர் சேகுதாவூதிற்கு தேசியப்பட்டியல் கொடுக்க வேண்டும் என மர்கூம் அஷ;ரப் அவர்கள் இவ்வுலகை விட்டு செல்ல முன் சொன்னபடியால் தேசியப்பட்டியல் வழங்கப்பட்டது. அடுத்த தடவை குமாரி விடயத்தில் இருந்து ஹக்கீமை காப்பாத்திய நன்றிக்கடனுக்காக தேசியப்பட்டியல் வழங்கப்பட்டது. இருந்தும் ஹக்கீமின் தலைமைத்துவத்தில் இருந்த குறைபாடுகளை பஸீர் சேகுதாவூத், ஹசனலி, அன்சில், சபீக் ரஜாப்டீன்;, கலீல் மௌலவி, இல்யாஸ் மௌலவி போன்றோர்கள் மூடி மறைத்து பல வருடங்கள் கட்சியை இழுத்துச் சென்றதுடன் ஹக்கீமின் ஓட்டை உடசல்களை பூசி மெழுகி கட்சியை காப்பாற்றப் போய் தங்களது பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டதுடன், ஹக்கீமின் பிழையான செயற்பாட்டை தடுத்து பாதையை சரிப்படுத்தினால், ஹக்கீமின் பார்வையில் பஸீர் சேகுதாவூத், ஹசனலி, அன்சில், சபீக் ரஜாப்டீன்;, கலீல் மௌலவி, இல்யாஸ் மௌலவி போன்றோர்கள் பிழையானவர்களாக, தலைமைக்கு போட்டியானவர்களாக தெரிகின்றார்கள். அதனால் தான் இது போன்றவர்களை கட்சியை விட்டு வெளியேற்ற இவ்வளவு திட்டமிட்ட வேலைகளையும் செய்து, தற்போது சிக்கலில் மாட்டிக் கொண்டு விழுங்கவும் முடியாது துப்பவும் முடியாது தவித்துக் கொண்டிருக்கும் ஹக்கீம் தனது கையால் மண்ணையெடுத்து தனது தலையிலேயே போட்டுக் கொண்ட கதையாகி விட்டது.
பஸீர் சேகுதாவூத், ஹசனலி, அன்சில், சபீக் ரஜாப்டீன்;, கலீல் மௌலவி, இல்யாஸ் மௌலவி போன்றோர்களுக்கு இந்த தண்டனை கிடைப்பது நியாயமானது .அன்று அதாவுல்லா போன்றவர்கள் கிழக்குக்கு ‘கெபினட் அமைச்சு’ வேண்டும் என்ற கோசத்துடன் ஹக்கீமை பதவியிறக்க முயற்சித்த போது ஆதரவு வழங்கியிருந்தால் அல்லது பிறகாவது உண்மையை விளங்கி ஹக்கீமை துரத்தியிருந்தால் இன்று இந்நிலை கிழக்குக்கோ, இவர்களுக்கோ, மக்களுக்கோ ஏற்பட்டிருக்காது.

ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை (ஹக்கீமை துரத்தியடிக்க) போராளிகளே புறப்படுங்கள்! — மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ;ரப் —