ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய தேசிய எல்லை முகாமைத்துவ குழுவொன்று நிறுவப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் தெரிவிப்பு !

625_fotor

 

எல்லைப் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய தேசிய எல்லை முகாமைத்துவ குழுவொன்று நிறுவப்பட உள்ளதாகவும் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறு குழுவொன்று உருவாக்கப்பட உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எந்தவொரு நாட்டினதும் தேசியப் பாதுகாப்பிற்கு எல்லைப் பாதுகாப்புச் சட்டங்கள் மிகவும் அவசியமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் எல்லைகள் ஊடாக நபர்கள் மற்றும் பொருட்கள் பரிமாறிக்கொள்ளப்படும் சந்தர்ப்பங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் 2020ம் ஆண்டளவில் 200மில்லியன் கிலோ கிராம் பொருட்களும் 10 மில்லியன் நபர்களும் பரிமாறிக்கொள்ளப்படக்கூடிய சாத்தியமுண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.