ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகளுக்கான ஜெனீவா நிலையத்தில் இலங்கைக்கு அங்கத்துவம் கிடைத்துள்ளது.
குறித்த தகவலை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இந்த அங்கத்துவத்தின் அடிப்படையில் குழுவின் கூட்டம் கடந்த 15ம் திகதி இடம்பெற்ற போது, முதன் முறையாக இலங்கை சார்பில் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க அதில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இலங்கையின் அங்கத்துவத்தை வரவேற்ற குழுவின் தலைவர், ஃப்ரான்சுவா ஹீஸ்பர்க், குழுவின் செயற்பாடுகளுக்கு இலங்கையின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.