அரேபியன் நலன்புரிச் சங்கத்தினால் மருதமுனை ‘ஹியுமன் லின்க்’ நிறுவனத்திற்கு நிதி அன்பளிப்பு!

பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனை எம்.எஸ்.ஹபிழாவின் ஏற்பாட்டில் அரேபியன் நலன்புரிச்சங்கத்தினால் மருதமுனை ஹியுமன் நிறுவனத்திற்குகிற்கு நிதி அன்பளிப்புச் செய்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(20-11-2016)ஹியுமன் லின்க் அலுவலகத்தில் நடைபெற்றது.

1-pmma-cader-19-11-2016

மருதமுனை ஹியுமன் லின்க் விஷேட தேவையுடைய பிள்ளைகளுக்கான வளப்படுத்தல் நிலையத்தின் வளர்ச்சிக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் மருதமுனையைச் சேர்ந்த எம்.எஸ்.ஹபிழாவின் ஏற்பாட்டின் பேரில் அரேபியன் நலன்புரிச்சங்கத்தின் தலைவர்களான நபீல் முபாறக் மற்றும் ஜமால் முகம்மட்; ஆகியோரினால் ஏழாம் கட்ட அன்பளிப்பாக ஒரு தொகை நிதி வழங்கப்பட்டது.

 

அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு தொகை நிதியை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் மருதமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.ஹபிழாவின் சகோதரரான எஸ்.எம்.எம்.அபூபக்கர்(நஜீம் ஆசிரியர்) மற்றும் உறவினர்களான அதிபர் எம்.சி.எம்.அபூபக்கர்,அதிபர் ஏ.எம்.ஜிப்ரி,ஆசிரியர் டீன் கபூர் ஆகியோர் ஹியுமன் லின்க் பணிப்பாளர் ஏ.எல்.கமறுத்தீனிடம் கையளித்தனர்.

2-pmma-cader-19-11-2016

இந்த நிகழ்வில் நிறுவனத்தின் செயலாளர் ஏ.ஆர்.ஏ.சத்தார் மற்றும் நிறுவனத்தின் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.