அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம் மீது தீவிர விமர்சனம் செய்து வரும் ஒரு ஒய்வு பெற்ற ராணுவத் தளபதியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார.
அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு முகமையின் இயக்குநராக கடந்த 2014-ஆண்டு வரை, இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகித்த மைக்கேல் ஃபிளின், பாதுகாப்பு தொடர்பான அம்சங்களில் டொனால்ட் டிரம்புக்கு பல மாதங்களாக ஆலோசனை வழங்கி வருகிறார்.
தற்போதைய ஒபாமா அரசின் நிர்வாகத்தை, பொதுவான உலக விவகாரங்களில் அதன் அணுமுறையையும், மேலும் குறிப்பாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். தீவிரவாதக் குழு மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகள் குறித்தும், மைக்கேல் ஃபிளின் விமர்சித்துள்ளார்.
இந்த விவாகரங்களில், அமெரிக்க அரசின் நடவடிக்கைளில் அரசியல் ரீதியாக சரியான முடிவை எடுக்கவேண்டும் என்ற கண்ணோட்டமே காணப்படுகிறது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.