கலகொட – அம்பலாங்கொட பகுதியில் தலையில் அடிப்பட்டு நீண்ட காலங்களாக காயங்களுக்கு உள்ளான இளைஞன் ஒருவரின் மருத்துவ செலவுகளை தான் பொறுப்பேற்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த இளைஞனை அவரது வீட்டிற்குச் சென்று பார்வையிட்டுள்ளதுடன் அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞனின் வீட்டில் வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்ல முடியாத நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த இளைஞனுக்கு ஐந்து சிகிச்சைகள் மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்கு போதியளவு பணம் இல்லை என்றும் குறித்த இளைஞனின் தாய் தெரிவித்துள்ளார்.
எனவே தன்னால் முடிந்தவரையில் உதவ வேண்டும் என்றே தான் முன்வந்துள்ளதாக கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முடியதாவர்களுக்கு உதவி செய்வதற்கு தான் முன்னதாகவே எண்ணியிருந்ததாகவும், இவ்வாறு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் மலிங்க குறிப்பிட்டுள்ளார்.