மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது..!

donald-trump-hillary-clinton-debate

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் ஓட்டு போட தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே சுமார் 4 கோடி பேர் முன்கூட்டியே ஓட்டு போடும் வசதியை பயன்படுத்தி, ஓட்டு போட்டுவிட்டனர்.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் (70) இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் ஹிலாரிக்கு சாதகமாக அமைந்தாலும், இருவருக்கும் இடையேயான ஆதரவு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், முதற்கட்டமாக நியூ ஹம்ப்ஸைர் மாகாணத்தின் டிக்ஸ்வில்லி நோட்ச் மற்றும் மில்ஸ்பீல்டு ஆகிய பகுதிகளில் நள்ளிரவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 100 வாக்குகள் பதிவானது உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன.

டிக்ஸ்வில்லி நோட்ச் பகுதியில் ஹிலாரி 4 வாக்குகளையும், டிரம்ப் 2 வாக்குகளையும் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜான்சன் ஒரு வாக்கும் பெற்றுள்ளார். ஹர்ட் பகுதியில் ஹிலாரி 17 வாக்குகளும், டிரம்ப் 14 வாக்குகளும் பெற்றனர். இருப்பினும் மில்ஸ்பீல்டு பகுதியில் டிரம்ப் அதிரடியாக 16 வாக்குகள் பெற்றார். ஹிலாரிக்கு 4 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.