பி.எம்.எம்.எ.காதர்
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் 2016 ‘ஹோப்’ வேலைத்திட்டம் ஊடாக நாடு பூராகவும் ஒரு பிரதேச செயலகப் பிரிவுக்கு ஒரு பிரதேச இளைஞர் முகாம் என்ற அடிப்படையில் இலங்கையின் 9 மாகாணங்களிலுள்ள 334 பிரதேச செயலகப் பிரிவிலும் 334 பிரதேச இளைஞர் முகாமை நடாத்துவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் திட்டமிட்டுள்ளது.
இளைஞர் கழகங்களின் தலைவர்களுக்கும் அங்கத்தவர்களுக்கும் இடையில் அன்னியோன்னிய நட்பினை மேம்படுத்தல் பல்வேறு திறமைகள் ஆக்க அறிவுடனான இளைஞர் தலைவர்களின் அறிவு மற்றும் அனுபவங்களை ஏனைய பங்குபற்றுதல்களுடன் பரிமாறிக் கொள்வதற்கு சந்தர்பத்தை வழங்கல் அவர்களின் தொடர்பாடல் திறமைகள் ஆளுமை அபிவிருத்தி நோக்கத்தை மையமாக கொண்டு ஹோப் 2016 பிரதேச இளைஞர் முகாம்கள் நடைபெறுகின்றது.
இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பிரதேச இளைஞர் சம்மேளனம் ஊடாக பிரதேச இளைஞர் முகாம்கள் கடந்த 3 தினங்களாக நடைபெற்றது.
இதனடிப்படையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி பிரதேச இளைஞர் முகாம் கோறளைப்பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி பீ.எம்.றியாத்தின் வழிகாட்டலில் ஒட்டமாவடி மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் ஒட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவரும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் அமைப்பாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.
28-10-2016 கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடக்கம் 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை இடம்பெற்ற மேற்படி பிரதேச இளைஞர் முகாமில் 100 இளைஞர் யுதிகள் கலந்து கொண்டனர்.
இவ் பிரதேச இளைஞர் முகாமில் வினைத்திறன் கூடிய தீர்மானங்களை எடுத்தல் திட்டமிடல் ஆளுமை விருத்தியும் ஒன்றிணைதலும் மென் திறன்கள் விருத்தி போன்ற தலைப்புகளில் இளைஞர் யுவதிகளுக்கு விரிவுரை இடம்பெற்றது.
இங்கு இசையும் ரசனையும் ரசனையை மெறுகூட்டும் வேலைத்திட்டமும் தீ பாசறை செயற்பாடுகள் போன்ற இளைஞர் அபிவிருத்தி வேலைத்; திட்டங்கள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து பிரதேச இளைஞர் முகாமின் இறுதி நிகழ்வாக பிரதேச இளைஞர் முகாமில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (30-10-2016) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒட்டமாவடி மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம். றுவைத் ஒட்டமாவடி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி பீ.எம்.றியாத் உட்பட ஒட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் எம்.ரீ.எம்.பாரிஸ் உள்ளிட்ட பிரதேச இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு அதிதிகளிளால் பிரதேச இளைஞர் முகாமில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.