தன்னை கைது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது : டிரான் அலஸ் !

tiran_alles1
 எந்தவொரு சட்ட அடிப்படையும் அற்ற நிலையில் தன்னை கைது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதனை தடுக்க இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸினால், உயர் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
 மேற்படி மனுவில், பொலிஸ் மா அதிபர், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவின் பணிப்பாளரான பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா, அப்பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்ட மா அதிபர் ஆகியோர், பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமான தனக்கு எதிராக அரசியல் வேட்டையொன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ஆலோசனைக்கமைய தன்னை கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.