கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் திடீரென தேசிய கீதம் சிங்களத்தில் ஒலிக்கச்செய்யப்பட்ட போது அதனை உடனடியாகவே நிறுத்தியோடு பல்லின சமூகம் வாழ்கின்ற இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் தேசிய கீதம் தமிழ் மொழியிலேயே பாடப்பட வேண்டும். இது எங்களுக்கு அரசியலமைப்பு மூலம் வழங்கப்பட்ட உரிமை இதனை எச்சந்தர்ப்பத்திலும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கிளிநொச்சி ஜெயபுரம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தேசிய கொடி ஏற்றப்பட்ட பின்னர் தேசிய கீதம் சிங்களத்தில் ஒலிக்கச்செய்யப்பட்டது. இதனை உடனடியாக நிறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியிலேயே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்றும் இது தொடர்பில் மக்கள் தெளிவாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.