ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஆத் இன்று (3) ஏற்பாடு செய்த ஜி.எஸ்.பி சலுகைக்காக முஸ்லீம் தனியார் சட்டத்தில் அரசு கை வைப்பதை எதிர்த்து மாளிகாவத்தையில் உள்ள தவ்ஹீத் தலைமைக்காரியாலயமிருந்து பேரணியாக ்இருந்து கோட்டை புகையிரத நிலையத்தை அண்டித்து சென்று கொண்டிருந்தது.
இவ் மாபெரும் பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை பொலிசார் மாளிகாவத்தை பொலிஸ் நிலைய த்தினை அண்டிய பாதையை வழிமறுத்து பாதைகளை மூடிவிட்டனர். அத்துடன் கலகத்தை அடைக்கும் பொலிசார், வரவழைக்கப்பட்டிருந்தனர். மற்றும் நீர்பாய்ச்சி அடிக்கும் பௌசர்களும் வரவழைக்கப்பட்டிருந்தன.
ஆகவே பேரணியினர் ஏற்பாட்டார்கள் மாளிகாவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் உயர் அதிகாரிகளிடம் கலந்துரையாடியதையடுத்து வீதியிலேயே மறித்து கண்டன கூட்டத்தினை நடு வீதியில் நடாத்திய பின்னர் கலைந்து சென்றனர்.
இங்கு ஸ்ரீலங்கா தவஹீத் ஜமாஆத்தினர் செயலாளர் கருத்து தெரவிக்கையில் –
அண்மையில் ஜி.எஸ்.பி சலுகை தருவதயின் முஸ்லீம் விவாக மற்றும் ஷரிஆ சட்டத்தினை திருத்துவதற்கு அமைச்சர் சகால ரத்னாயக்க மற்றம் நீதி அமைச்சர்கள் தலைமையில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளன. ஜரோப்பிய யுணியன் பிரநிதியும் முஸ்லீம் திருமண வயதினை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். முஸ்லீம்களுக்க ஏற்ற வாறு விவாக சட்டம் அமுலுள்ளவதை அதில் ஒருபோதும் கை வைக்க வேண்டாம்.
இந்த அரசாங்கத்தின் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு முழுக்க முஸ்லீம் வாக்குகள் அளிக்கப்பட்டன. ஆகவே இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்களது, மதம், அவர்களது உரிமைகள் சட்டங்கள் பாதுகாக்கபபடல் வேண்டும். அவர்களது பரம்பரையாக இருந்து வந்த சட்டங்களில் கைவைக்கக் கூடாது. எனவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரம் கடந்த ஆட்சியில் வில்லன் போல் இருந்து வந்த பொதுபலசேனாவின் முதுகெலும்பு கழற்றப்பட்டுள்ளது. அவர் எமது சட்டம் மதம் உரிமைகள் தெரியாமால் மீண்டும் அவர் எமக்கு எதிராக குரல் எழுப்புகின்றார். அவர் அவருடைய வரையருக்குள் இருந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் தமிழ் ் முஸலீம், கிருஸ்தவர்கள், ஹிந்து போன்ற இனங்கள் மிகவும் அண்னியோன்னியமாக வாழந்து வருகின்றனர்எனவும்அவர் தெரிவித்தார்.