விடுதலைப் புலிகளை கொன்ற இராணுவ வீரர்களை சிறைப் பிடித்து சர்வதேசத்துக்கு வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சமஷ்டியினை கொண்டு வந்து நாட்டினை பிரிப்பதற்காகவே வரவு-செலவு திட்ட வாக்கெடுப்புக்கு முன்னரான அரசியல் யோசனை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கினை தனி நாடாக பிரித்து சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கும் வகையிலான செயற்பாடுகள் இந்த அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், புலிகளைக் கொன்ற இராணுவத்தினரை சிறைப்பிடிப்பதாக சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
இவ்வாறான தேசவிரோத செயற்பாடுகளை அரசு செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாம் பீரங்கியினை எடுத்து கொண்டு வந்து மிரட்டினாலும் ஒரு போதும் அஞ்சமாட்டோம். இதற்குப் பதிலாக அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.