நாளை அக்கரைப்பற்றில் மாபெரும் கண்டனப் பேரணி

அக்கரைப்பற்றின் திட்டமிட்ட அபிவிருத்தி பணிகளை சீர்குழைக்கும் நாசகாரர்களுக்கெதிரான 
மாபெரும் கண்டன பேரணி

முன்னால் மாநகர மக்கள் பிரதிநிதிகளின் அழைப்பு,

Crowd-Silhouettes

அக்கரைப்பற்று மாநகரசபை பலமுறையான அபிவிருத்திதிட்டமிடலுடன் அழகிய தோற்றத்துடனும் முழு இலங்கைக்கும் முன்மாதிரியாக திகழ்கின்ற நகரமாகும்.

இதன் அபிவிருத்தில் தன்னை அர்ப்பணித்து பல்வேறு வகையான திட்டமிடலுடன் இதை மாநகராக்கி அழகுபார்;த்த பெருமை தேசிய காங்கிரஸினுடைய தலைவர் அல்ஹாஜ் எ.எல்.எம் அதாஉல்லாஹ் அவர்களைச்சாரும்.

இன்று அக்கரைப்பற்றில் நடந்து வருவது என்ன?

அக்கரைப்பற்று மாநகரத்துக்கென்று முழுமையான திட்டமிடலுடன் மாநகரப் பூங்கா, ரெஸ்டூரன்ட், தீயணைப்புப் பிரிவு, நூதனசாலை, அக்கரைப்பற்று மைதானத்துக்கு செல்லும் ரெவுன்டபோட், பூங்கவினுடைய முகப்பு என்று முறையான வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வந்தன. 

இந்த வேளையில் நூதனசாலையும், பூங்காவினுடைய முகப்பும், ரெவுன்டபோட் உடைய வேளைகளும் பூர்த்தியாவதற்கு முன்னர் எமது அதிகாரம் கைநழுவிப்போனது.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அக்கரைப்பற்றுக்கு எதுவுமே செய்யாத அக்கரைப்பற்றின் வளர்ச்சியையும், அதன் கனவுகளையும் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஏற்கனவே அக்கரைப்பற்று நெற் களஞ்சியப்படுத்தும் சாலையை தனது சொந்த தேவைக்காக ஆடைத் தொழிற்சாலையாக பயன்படுத்தி கபளீழிகரம் செய்த பைசல் காசிம்.

இன்று அக்கரைப்பற்றின் மிகமுக்கியமான பெறுமதி வாய்ந்த வளத்தை சூறையாடி எது எங்கு வரவேண்டுமே அதை அங்கு அமைக்காமல் அக்கரைப்பற்றின் அழகை, அதன் அபிவிருத்தியை சீர் குழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்.

மிகப் பெறுமதியான குறிப்பிட்ட இடத்தில் ஒரு சில மில்லியன் பெறுமதியான சமூகசேவைக் கட்டிடத்தை கட்டுவதற்காக வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் நாம் வாக்களித்த மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும், அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவராகவும் இருக்கின்ற கௌரவ எம்.எஸ். உதுமாலெவ்வையினால் பல முறை இவ்விடயம் எடுத்துக்காட்டபட்டும். அவற்றைத் தட்டிக்கழித்து குறிப்பிட்ட கட்டடத்தைக் கட்டுவதற்கு பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்கு அக்கரைப்பற்று புத்தி ஜீவிகள் கொண்ட குழுவொன்றை அமைக்குமாறு கோரிய போதும். அந்த கோரிக்கையை புறக்கணித்தார் குறிப்பிட்ட பிரதி அமைச்சர்.

அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்ட பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் கடந்த அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போது தங்களது எதிர்பபை வெளிக்காட்டிய நிலையில் அவர்களது கோரிக்கையை புறக்கணித்த அனுபமில்லாத அக்கரைப்பற்று அபிவிருத்திக்கு எந்தவிதப் பங்களிப்பும் செய்யாத. அரசியல் நோக்கங்களுக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டவரினுடைய அசிரத்தையை கண்டிக்கின்றோம். 

அக்கரைப்பற்றின் பெருவாரியான மக்களின் செல்வாக்கைப் பெற்ற மக்கள் பிரதிநிதியான மாகாணசபை எதிர்கட்சித் தலைவரின் கருத்துக்களை உள்வாங்காமால் தான் தோண்றித்தனமாக  நடந்து கொள்ளும் பிரதி அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும

அனுபமில்லாத இவ்வாறரான விடயங்களில் போதிய அறிவில்லாத நிலையில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களின் கருத்தை புறந்தள்ளி உதாசீனப்படுத்திய அக்கரைப்பற்று பிரதேச செயலாளருக்கு எதிராகவும் தான் இந்த கண்டன அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது. 

இவர்களால் அண்மையில் மேற்கொண்ட சில அடிக்கற்கள் நாட்டும் செயற்பாடுகள் தொடர்பில் அக்கரைப்பற்று மக்கள் விசனம் வெளியிட்டு வருக்கின்ற நிலைமையில் உதாரணமாக

அக்கரைப்ற்று 02 குறிச்சி மத்திய வீதியின் முறையற்ற பாதை அமைப்பினால் அந்த வீதியின் நீர் தேங்கி நின்று உடைக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதையும் 
அக்கரைப்பற்றின் தேசிய பாடசாலைக்கு பின் புறமாக பல் வைத்திய சுகாதார நிலையத்தை வாய்க்கால் கட்டி சென்று அடிக்கல் நாட்டி பின்னர் அந்த அபிருத்தி திரும்பிச் செல்லுகின்ற நிலையின் இருந்த போது அக்கரைப்பற்றின் மாநகர சபை உறுப்பினர் சபீஸினுடைய சொந்த காணியினை வழங்கி அந்த அபிவிருத்தி சென்று விடாமல் தடுத்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

எனவே நாம் கூறி நிற்பது,

தங்களுக்கு கிடைக்கப் பெரும் கொந்தராத்துக்காக அக்கரைப்பற்றின் அபிவிருத்தியை பலிக்கேடாக்கி விடாதீர்கள்.’

அக்கரைப்பற்றின் அபிவிருத்தி தொடர்பில் பாரிய முறையான திட்டமிடலுடன் செயற்படுவதை குழப்பி விடாதீர்கள்.

அக்கரைப்பற்றின் விடயங்களில் அக்கரைப்பற்று மக்களினால் வாக்களிக்கப்பட்டு அக்கரைப்பற்று அபிவிருத்திக்கு குழு இணைத் தலைவராக இருக்கின்ற உதுமாலெவ்வையினுடைய கருத்தைக் கவனத்தில் கொண்டு மக்களின் சேவைகளை நிறைவு செய்யுங்கள்.

அக்கரைப்பற்று ஊருக்கொதிரான எந்த முடிவையும நாம் எடுக்க விடமாட்டோம்.
கபளீகரம் செய்யப்படும் அக்கரைப்பற்றின் பெறுமதி மிகு வளங்களை மீட்டெடுப்போம். 

அணிதிரண்டு வாருங்கள்.

நாளை ஜூம்மா தொழுகையின் பின்னர் அக்கரைப்பற்று பட்டிணப்பள்ளிவாயல் முன்றலில் இருந்து அமைதியான பேரணி ஆரம்பமாகி அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தை சென்றடைந்து. பிரதேச செயளாலரிடம் மகஜர் கையளிக்கப்பட இருக்கிறது. அக்கரைப்பற்றின் முறையான அபிவிருத்திக்கு கைகொடுக்க அனைவரையும் அன்புக்கரம் கொண்டு அழைக்கின்றோம்.

-AZMY ABDUL GAFOOR –