கோப் குழுவின் சுயாதீனத்தைப் பாதுகாக்க தான் எந்த நேரத்திலும் செயற்படத் தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பில் கோப் குழுவின் அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கோப் அறிக்கை குறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
சிலர் தமது குறைகளை மறைத்துக் கொள்ளவே கூக்குரல் இடுகின்றனர். தனக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு எடுக்கும் முயற்சி ஒரு அரசியல் பழிவாங்களே அன்றி வேறில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் உலகிலேயே பெரிய திருட்டாக மத்திய வங்கி முறி மோசடியை கருதுகின்றனர். தேவை ஏற்பட்டால் லஞ்ச, ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிலும் முன்னிலையாக பின்வாங்க போவதில்லை என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.