முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அவுஸ்திரேலியா செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வீசா கோரி அவுஸ்திரேலிய தூதரகத்தில் விண்ணப்பம் கொடுக்கப்பட்ட போதும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
முழங்கால் மற்றும் கணுக்காலில் காயம் உள்ளமையினால் வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக அவுஸ்திரேலியா செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு அவரது வழக்கறிஞர்கள் ஊடாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் யோஷித ராஜபக்ச கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கமைய அவரது அனுமதி வழங்கப்பட்டிருந்தன.
எனினும் அவரது வீசா நிராகரிப்பட்டதனை தொடர்ந்து யோஷிதவின் அவுஸ்திரேலியா பயணமும் தடைப்பட்டுள்ளது.
எனினும் இந்த வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமைக்கு பின்னால் தற்போதைய அரசாங்கத்தின் பிரபல ஒருவர் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரபலம் அவுஸ்திரேலிய தூதரகத்தில் மேற்கொண்ட கோரிக்கைக்கமையவே யோஷிதவிற்கான வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.