யுத்த வரலாறு பற்றி எழுதப்பட்ட 2 நூல்களை பாடசாலை பாடத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்

யுத்த வரலாறு பற்றி எழுதப்படும் நூல்களை பாடசாலை பாடத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதற்காக ”மோதலில் கொல்லப்பட்ட போர் வீரர்கள்” மற்றும் ”நந்திக்கடலுக்கான பாதை ”ஆகிய புத்தகங்களை அவர் பரிந்துரை செய்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய ”மோதலில் கொல்லப்பட்ட போர் வீரர்கள்” என்ற புத்தகத்தை வெளியிடும் நிகழ்வில் வைத்தே மகிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வு கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதேவேளை,”நந்திக்கடலுக்கான பாதை” என்ற புத்தகத்தை ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குமார் குணரத்ன எழுதி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.