நீங்கள் நிறைய செல்போன் பேசுகிறீர்களா?

(FILE - ILLUSTRATION) A an archive illustration dated 16 July 2012 shows a man talking on an iPhone 4 in Berlin, Germany. Apple is reacting to criticism about the secret copying of iPhone address books by at least one popular app and promises that in tநீங்கள் நிறைய செல்போன் பேசுகிறீர்களா? ‘அதனாலென்ன… செல்போனால் கதிரியக்கப் பாதிப்பு ஏற்படுகிறது என்பது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படவில்லையே?’ என்றுதானே கூறுகிறீர்கள்? கதிரியக்கத்தாக்கம் வேண்டுமானால் உறுதிப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் வேறு பல பாதிப்புகள் ஏற்படுவது உண்மை.

அவை பற்றி… காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சம் 90 டெசிபல்கள் வரை சத்தங்களைக் கேட்கலாம். ஒரு நாளைக்கு அதிகபட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும்.

தொடர்ச்சியாகக் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பதால் காதின் கேட்புத் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் செல்போன் உபயோகிக்கும்போது என்ன நடக்கிறது தெரியுமா? சாதாரணமாக செல்போன் வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத்தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக்கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம்.

அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பிருக்கிறது. செல்போனில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாகப் பாதிப்பு இருக்காது. ஆனால் தொடர்ச்சியாக அரைமணி நேரம், ஒரு மணி நேரம் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தால் நிச்சயமாகப் பாதிப்பு ஏற்படும். தவிர, செல்போனில் இருந்து வெப்பமும், வெப்பக் கதிர்வீச்சும் வெளிப்படுகின்றன.

நாம் செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால் இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்குள்ளே இருக்கும் நுண்ணிய நரம்புகளைப் பாதிக்கும் வாய்ப்பிருக்கிறது. அதேபோல செல்போனில் விட்டுவிட்டு சிக்னல் கிடைக்கும் போது மின்காந்த அலைகளின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும்.

இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். நாளடைவில், தூரத்தில் ஹாரன் ஒலிப்பது, காற்றில் காலண்டர் அசைவது, பேனா கீழே விழுவது போன்ற சிறிய சத்தங்களைக் கூட கேட்க முடியாமல் போய்விடலாம். செல்போனை நேரடியாக காதுக்கு அருகில் வைத்துப் பேசாமல் ‘ஹேண்ட்ஸ் பிரீ’ உபயோகித்துப் பேசுவதன் மூலம் மேற்கண்ட பாதிப்புகளை ஓரளவு தவிர்க்கலாம்.