இலங்கையில் இராணுவப் புரட்சியை முறியடிப்பதற்கான தீவிர முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது

இலங்கையில் இராணுவப் புரட்சி ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில் அதனை முறியடிப்பதற்கான தீவிர முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

உடனடியாக இலங்கையின் இராணுவ கூட்டுப்படைத்தளபதி ஒருவரை நியமனம் செய்துள்ள ஜனாதிபதி பிரதி கூட்டுப்படைகளின் தளபதியும் நியமித்துள்ளார். 

அத்துடன் விமானப்படை கூட்டுத்தளபதி ஒருவரையும் அரசாங்கம் நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அவசர அவரசமாக நியமிக்கப்பட்டுள்ள மேற்படி பதவிகள் யாவும் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படைத்தளபதியாக மேஜர் ஜெனரல் உபய மெதவெல நியமிக்கப்பட்டுள்ளதுடன் கூட்டுப்படைகளின் பிரதி தளபதியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை விமானப் படையின் கூட்டுப் படைத் தளபதியாக எயார்வைஸ் மார்ஷல்.டி.எல்.எஸ்.டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த புதிய நியமனங்கள் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்குவரவுள்ளது.

இதை விட இராணுவ புரட்சிக்கு துணைபோக கூடும் என்று சந்தேகிக்கப்படும் முக்கியஸ்த்தர்களை காண்காணிப்பதற்கான விசேட புலனாய்வு அணியோன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் படைத்தரப்பினைச் சேர்ந்த 280 உத்தியோகத்தர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வரும் ஓய்வு பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பதவிகளை வகித்து வரும் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் உட்பட மொத்தமாக 280 பேர் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த விசாரணைகளுக்காக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களை அனுப்பி வைக்குமாறு இராணுவத்திற்கு புலனாய்வுப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளதோடு, இது தொடர்பான பட்டியல் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த செயற்பாடுகள் அனைத்தையும் அரசாங்கம் இலங்கையில் இராணுவப்புரட்சி ஒன்று ஏற்படுவதனை தடுப்பதற்கான கட்டமைப்புக்களை உருவாக்குவதற்காகவே மேற்கொண்டு வருகின்றது என்கின்றனர் அரசியல் அவதானிகள்.