கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஒக்டோபா் வாசிப்பு மாதத்தின் வாசிப்பு அரங்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவா் தம்பு சிவாசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. வாசிப்பு எனும் தொனிப்பொருள் வாசிப்புப் பண்பாடு ஆய்வரங்கும் நடைபெற்றது. பிற்பகல் நிகழ்வில் வாசிப்பும் மனித ஆளுமையும்” என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் தேசிய கல்விக் கல்லுாாியின் விரிவுரையாளா் பா. பாலகணேசன் சொற்பொழிவு ஆற்றினாா்.
இந் நிகழ்வின்போது கொழும்பு வைச மங்கையா் வித்தியாலய மாணவிகளது வாசிப்பதால் மனிதன் புரணமடைகின்றான் என்ற தலைப்பில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இங்கு உரையாற்றிய விரிவுரையாளா் பாலகனேசன் தெரிவிக்கையில் –
தமிழ் சூழலில் வாசிப்புப் பண்பாடு அருகி வருகின்றது. சுயதேடல், சுயசிந்தனை, சுய கற்றல் சுருங்கி வருகின்றது.
கண், காது நா குரல் செயற்பாடுகள் ஆழமாக வாசிக்கத் துாண்டுகின்றது. ஆளுமை ஒருவரின் இயக்கியழ் தனித்துவத்தை காட்டுகின்றது. வாசிப்பு மூலம் ஆளுமை உள்ளவா் வாசிப்பாா். உதாரணமாக வாசிப்பு ஒரு மணிதனை முழுமையானதொரு மனிதானக்குகின்றது.. சோக்கட்டிஸ் மரண தண்டனை விதிக்க முன்னா் அவா் தனக்கு வாசிப்பதற்கு 1 நிமிடம் கேட்டிருந்தாா், மகாத்மாகாந்தியிடம் தங்களுக்கு ஒரு கோடி ருபா தரப்பட்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்டதற்கு நான் ஒரு மிகச் சிறந்த நுாலகம் ஒன்றை அமைப்பேன் எனச் சொன்னாா். நெல்சன் மன்டேலா சிறையில் இருக்கும்போது அவா் மாத்மா காந்தியின் ”சத்திய சிந்தனை ”என்ற நுாலை வாசித்த பின்னா்தான் தான் கருப்பு இன மக்களின் போரட்ட தோண்றியதாகவும் தெரிவித்திருந்தாா்.
அதே போன்று அண்மையில் கொலைசெய்யப்பட்ட ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசைன் சிறை அடைக்கப்பட்ட பின் அவரது முகத்தில் இருந்து எவ்வித மாற்றமோ அமேரிக்கா்களுக்கு தெரியவில்லை. ஆனால் அவா்கள் அவருக்கு ஒரு நுாலகமொன்றை காட்டினாா்கள். அவா் அங்கு சென்று ” ஓல்ட மேன் என் சீ ” வயதுமுதிா்ந்த மனிதனும் கடலும் என்ற ஒரு நாவலை தெரிபு செய்து வாசித்தாா். அப் புத்தகத்தில் ஒரு இளைஞன் கடலில் எவ்வாறேயினும் சென்று ஒரு திமிங்கில மீனை பிடித்து கறை சோ்க்க வேண்டும் என்று பாடுபட்டான். அவனால் முடியவில்லை. இறுதியில் அவன் வயதான காலத்தில்தான் ஒரு திமிங்களம் அகப்பட்டது. அதனை அவனால் பிடித்து கரை சோ்க்க முடியவில்லை. இருந்தும் இறுதியாக அவன் அந்த மீனுடனேயே சன்டையிட்டு வலையுடன் திமிங்கிலத்தை கட்டிப்பிடித்தவாறு கரைசோ்ந்தான் .ஆனால் அவன் உயிா் பிரிந்து இருந்தது. இதனை யே அமேரிக்கா்களுக்கு சதாம் ஹூசையின் தனது இறுதி முச்சியிருக்கும் வரை போராடுவேன் என்ற செய்தியை அவா் வாசித்த புத்தகத்தின் ஊடக வெளிப்படுத்தியிருந்தாா்.
காலை அமா்வு பேராசிரியா் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்றது. வாசிப்பு பண்பாடு ஆய்வரங்கும் வாசிப்புத் தரமும் வாசகா் பிரச்சினைகளும் என்ற தலைப்பில் ஜீவா சதாசிவம், ஆ.குகமுர்த்தி, கே. பொன்னுத்துறையும் செயலாளா் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியும் அங்கு உரையாற்றினாா்கள்.