மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பான கோப் குழு அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இாஜாங்க அமைச்சர் டிலான்பெரேரா தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக தவறிழைத்தவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது என்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன்மகேந்திரனை காப்பாற்றுவதற்கான முயற்சியே என்றும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.