சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளை சிறப்புடன் பாதுகாப்பதற்காக விசேட சட்டங்களை இயற்றியமைக்காக ஐநா நிபுணர் பாராட்டு!

அஷ்ரப் ஏ சமத்
கடந்த 10 நாற்களாக இலங்கை வந்திருந்த ஜ.நா வின் சிறுபான்மையினர் பற்றிய அறிக்கையாளர் ரீடா ஜசாக் நதோய ஜ.நா. கொழும்பு அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடகவியல் மாநாட்டில் தெரவித்த கருத்துக்கள்.

rita
இலங்கையின் புதிய அரசாங்கம் 2015 ஆண்டில் அடைந்த உந்துதலை இழந்துவிடக் கூடாது என்றும்,காத்திரமான செயற்பாடுகள் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனது அர்ப்பணிப்பை காண்பிக்குமாறும ;சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான ஐக்கியநாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் ரீடாஐசாக் நதேயா இலங்கைஅரசைக்கேட்டுக்கொண்டார்.

‘பாரிய அழிவுகளை ஏற்படுத்திய நீண்டகால சிவில் யுத்தத்தின் பின்பு அமைதி மிக்க சகவாழ்வை அடையும் பொருட்டு,ஒரு முழுமையான ,நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் சிறப்hபக ஓறுங்கிiணைப்பு செய்யபடபட்ட உண்மை நில்லிணக்கம், காயங்களை ஆற்றும் மற்றும்; பொறுப்பக்கூறல் முறைமை ஒன்று இடம் பெறவேண்டியதுடன்,’ஆனால் இது ஒரே இரவில் சாத்தியமாகக்கூடியதல்ல ‘என இலங்கைக்குதான் மேற்கொண்ட முதலாவது தகவல் சேர்க்கும் விஜயத்தின் இறுதியில் ரீடாநதேயா குறிப்பிட்டார்.

‘அதேவேளை, இலங்கையின் சிறுபான்மையினரின் கண்ணியம், தனித்துவம் ,சமத்துவம் மற்றும் வாழ்வின் சகலமட்டங்களிலும் பங்கேற்கும் அவர்களுடையஉரிமை ஆகியவற்றை அதிகசிறப்புடன் பாதுகாப்பதற்கான தனதுஅரசியல் மன உறுதிமற்றும் ஈடுபாட்டைக் காட்சிப்படுத்த இலங்கை அரசு சில துரித, முக்கியத்தவம் வாய்ந்தமற்றும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்’என்றும் அவர்வலியுறுத்தினார்.

ரீடாஐசாக் நதேயாஅவருடைய பணிதொடர்பான 10 நாள் விஜயத்தின் போது இலங்கை தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள், ஹிந்துக்கள்,பரங்கியர்கள்,கிறிஸ்தவர்கள், தெலுங்கர்கள், பழங்குடிமக்கள், மலாய் இனத்தவர்கள், இலங்கை ஆபிரிக்கர்கள் உட்படநாட்டில் பலபாகங்களில் வசிக்கும் பல்வேறுபட்ட சிறுபான்மை இனப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கருத்துக்களைவினவினார். மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளை அதிக சிறப்புடன் பாதுகாப்பதற்காக விசேடமான சட்டங்களையும் கொள்கைகளையும் இயற்றியமைக்காக ஐநா நிபுணர் தனது பாராட்டுக்களையும் தேசிய கூட்டுஅரசிட்குத் தெரிவித்தார்.

‘இருப்பினும் சவால்கள் இருக்கவே செய்கின்றன’என்றஅவர் மிகவும் உணர்வுபூர்வவிவாகரங்களுள் -குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான விவகாரங்களுள்- காணாமல் போனநபர்கள்,கைப்பற்றப்பட்டுள்ள காணிகளைத்திருப்பிக் கொடுத்தல், பாதுகாப்பு காரணங்களுக்காகத ;தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்தல், இராணுவமயப்படுத்தலை ஒழித்தல் போன்றவற்றை மிக அவசரமாக கவனிக்க வேண்டியுள்ளது.
நாடளாவியவிதத்தில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பின் போது மக்களை அரவனைத்து அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கானஅரச நிறுவனங்களின் பற்றாக்குறை,பொதுச் சேவையை பெறுவதிலும் நீதித்துறைகட்டமைப்பிலும் மொழிதொடர்பான தடைகள் இருத்தல் போன்றவை மீண்டும் மீண்டும் தென்பட்டன.

‘வறுமை, வன்முறை, தனிநபர்சட்டம் அடிப்படையிலும்; சாதி அடிப்படையில் பெண்களைபாகுபடுத்துதல் போன்றவை இந்தசவால்களுடன் சேர்ந்துள்ளன.’என்றும் நதேயாமேலும் சுட்டிக்காட்டினார்.

‘நம்பிக்கை என்பது அரச நிறுவனங்களிலும் பல்வேறுபட்ட இனப்பிரிவுகள் இடையேயும் கட்டியெழுப்பப்பட வேண்டும்’என்று மேலும் கூறியஅவர்,’நல்லாட்சி மற்றும் சகலரையும் உள்வாங்கிக் கொள்வதற்கானஅரசின் முன்னெடுப்புக்களில் ,முடிவெடுக்கும் செயற்பாட்டில் சிறுபான்மையினரும் ஒருபகுதிஆவதுடன்அரசமற்றும் மாகாணநிர்வாகத்தில் அவர்களுக்கு இடமளிப்பதற்கானஉத்தரவாதங்களும் உட்படுத்தப்படவேண்டும். அத்துடன் சிறுபான்மையினருக்குதாக்கம் ஏற்படுத்தும் விவகாரங்கள் தொடர்பாகஅவர்களுடன் மேற்கொள்ளும் கலந்தாலோசிப்புக்கள் கிரமமானவையாகவும்,நிறுவனமயப்படுத்தப்பட்டவையாகவும் குறிப்பிட்டகட்டமைப்புள்ளவையாகவும் இருத்தல் வேண்டும்’என்றும் கூறினார்.

.

அரசியல் சாசனசீர்திருத்தசெயற்பாட்டில் சிறுபான்மையினர் மிகுந்த எதிர்பார்ப்புக்களை வைத்துள்ளதாகவும் அது தமது உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்து அவற்றை செவ்வைபடுத்தும் ஒரு முக்கிய தருணமாக அவர்கள் காண்பதாகவும் சுட்டிக்காட்டிய ரீடாநதேயா,’சிறுபான்மையினரின் அரசசார்பற்ற அமைப்புக்கள் மற்றும் சமூகங்கள் பல்வேறுபட்ட தமது ஆலோசனைகளுடன் அதற்காககுரல் எழுப்பியுள்ளனர்’என்றும் கூறியதோடுஅவர்களுடையகருத்தக்கள் மற்றும் அபிலாiஷகள் சரியானவிதத்தில் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சட்டமற்றும் கொள்கை இயற்றல் செயற்பாட்டிட்கும், சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை ஊக்குவித்து ஒறுங்கிணைப்பு வழங்குவதற்காகவும் சிறுபான்மை சமூகங்கள் மற்றும் அரசாங்கம் இடையே ஒரு பாலத்தை ஏற்படுத்துமுகமாக சிறுபான்மையினர் தமது திறன்களையும் தகவல்களையும் வழங்கும் விதத்தில் அந்த சமூகங்களின் உரிமைகள் தொடர்பாக சுதந்திரமாக இயங்கும் அமைப்பொன்றை உருவாக்கவேண்டும் என்றும் ஐநா விசேடஅறிக்கையாளர் அழைப்புவிடுத்தார்.