அஷோக் லேலண்ட் நிறுவனத்தை புதிய தலைவர் வெற்றிகரமாக இட்டுச் செல்வார்:கடமையேற்பு நிகழ்வில் அமைச்சர் றிசாத்

அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய தலைவராகத் தனது கடமைகளைப்  பொறுப்பேற்றிருக்கும் ஸிராஸ் மீரா சாஹிப் இந்த நிறுவனத்தை வெற்றிகரமானதாக முன்னெடுத்து கைத்தொழில் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று (20/10/2016) தெரிவித்தார்.

14805436_662776410555074_33369397_n_fotor

அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவராக ஸிராஸ் மீரா சாஹிப் பதவியேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது, 

இலங்கை – இந்திய நாடுகளுக்கிடையிலே இடம்பெற்ற உடன்படிக்கையின் விளைவாக அஷோக் லேலண்ட் நிறுவனம் இலங்கையில் தனது பணிகளை ஆரம்பித்தது. கடந்த காலங்களில் இந்த நிறுவனம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றபோதும், புதிய தலைவர் இதனை மேலும் மெருகூட்டி, புதிய பாதையில் இந்த நிறுவனத்தை இட்டுச் செல்வார் என்று நான் பெரிதும் நம்புகின்றேன். 

14800692_662776527221729_1738271333_n_fotor

புதிய தலைவரை நான் பாடசாலை காலத்திலிருந்தே நன்கு அறிந்தவன். அவர் இளமைத் துடிப்பானவர். தனக்குக் கொடுக்கும் பொறுப்புக்களை மிகவும் திறம்படச் செய்து பாராட்டுக்களையும் பெற்றிருக்கின்றார்.

கடந்த காலங்களில் அவர் தனக்குக் கிடைத்த பாரிய பொறுப்புக்களைச் சரிவரச் செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அதேபோன்று இந்த நிறுவனத்தையும் சரியான பாதையில் இட்டுச் செல்வார் என நான் பெரிதும் நம்புகின்றேன் என்றார்.

14799042_662776670555048_798887277_n_fotor

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஸிராஸ் மீரா சாஹிப்,

அமைச்சர் றிசாத் பதியுதீன் தன்மீது வைத்துள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயற்பட்டு, இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவேன் என உறுதியளிக்கின்றேன்.

அமைச்சர் றிசாத் மக்கள் மனங்களில் இன்று நிலைத்து வருகின்றார். அவரது அத்தனை பணிகளுக்கும் எனது ஒத்துழைப்பை என்றுமே வழங்குவேன் என்றார். 

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அஸ்வர், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இஷாக் எம்.பி, மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்டீன், சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹுசைன் பைலா, நெடா தலைவர் உமர் காமில் உட்பட பலர் பங்கேற்றனர்.     

ஊடகப்பிரிவு