அடுத்தவர்களின் பிழைகளை விசாரணை செய்ய முன்னதாக நல்லாட்சி அரசாங்கம் முறையாக நடந்து கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஏனையவர்களின் பிழைகளை விசாரணை செய்வதற்கும் குற்றம் சுமத்துவதற்கும் முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர் ஊழல் மோசடிகளில் ஈடுபடக் கூடாது.
நல்லாட்சி அரசாங்க பிரதானிகள் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அடுத்தவரை தண்டிப்பதற்கு தாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற கொள்கைகயை அரசாங்கம் பின்பற்ற வேண்டுமென ஒமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அடுத்தவர் மீது ஒரு விரலை சுட்டும் போது ஏனைய விரல்கள் நம்மைச் சுட்டுகின்றன என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.