ஜனாதிபதி செயலகத்தின் இரண்டு டிப்பெண்டர் வாகனங்களை மறைத்து வைத்துள்ளதாக கூறி குமார வெல்கமவின் தோட்டத்தில் பொலிஸார் தேடுதலை நடத்தியதால் அவருடைய கௌரவத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
குமார வெல்கமவின் மத்துகம டெனிஸ்டர் தோட்டத்தில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் இந்த தேடுதலை நடத்தியுள்ளனர்.
அதிகாரிகள் பெரிய குற்றவாளிகளை கைது செய்வது போல் பகிரங்க தேடுதல் அனுமதியை பெற்றுக்கொண்டு தோட்டத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.
எதனை தேடுகிறார்கள் என்பதை கூட இந்த அதிகாரிகள் கூறவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாப்பது சபாநாயகரின் கடமை எனவும் பந்துல குணவர்தன ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.