எம்.ஐ.எம்.முகை­டீ­னுக்கு கௌரவ கலா­நி­திப்­பட்டம் வழங்க தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழகம் முன்­வர வேண்டும் !!

 ஏ.எல்.ஆஸாத் – சட்டக்கல்லூரி 

முஸ்­லிம்­களின் உரிமை மீறல்கள் தொடர்பில் பல புத்­த­கங்­க­ளை எழு­தி­யும் ஆவ­ணப்­ப­டுத்­தல்­க­ளை மேற்­கொண்­டுமுள்ள எம்.ஐ.எம்.முகை­டீ­னுக்கு கௌரவ கலா­நி­திப்­பட்டம் வழங்க தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழகம் முன்­வர வேண்டும் என கிழக்கு முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­கான அமைப்பு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

இது தொடர்பில் கிழக்கு முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­கான அமைப்பு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, 

எம்.ஐ.எம்.முகைடீன் என்­பவர் தொடர்­பிலும் அவர் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு செய்த பணி தொடர்­பிலும் எமது அவ­தா­னத்தை செலுத்த வேண்­டி­யுள்­ளது. இலங்கை முஸ்­லிம்கள் தொடர்பில் அவர் எழு­திய புத்­த­கங்கள் தான் இன்று முஸ்­லிம்கள் மீதான உரிமை மீறல்­க­ளுக்­கான ஆவ­ணங்­க­ளா­கவும் சாட்­சி­க­ளா­கவும் உள்­ளன.

இலங்கை முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சி­னைகள், மனித உரிமை மீறல்கள், அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்­தத்தில் முஸ்­லிம்கள், வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம், அளுத்­கம முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­தல்­களும் பள்­ளி­வாசல் உடைப்­புக்­களும், கொழும்பு முஸ்­லிம்­களின் அவ­ல­நிலை என பல விட­யங்­களை ஆவணப்ப­டுத்­தி­ய ஒரு­வ­ராக இவர் திகழ்­கிறார்.

இவ­ரினால் தமிழ் மற்றும் ஆங்­கி­லத்தில் எழு­தப்­பட்ட சுமார் 15க்கும் மேற்­பட்ட புத்­த­கங்­களே இலங்கை முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை தேசிய ரீதி­யாக மட்­டு­மன்றி  சர்­வ­தே­சத்­திற்கும் கொண்டு சென்­றுள்­ளன.

இன்று முஸ்­லிம்கள் தொடர்பில் எழும் பிரச்­சி­னை­க­ளுக்­கான தர­வு­களும் புள்­ளி­வி­ப­ரங்­களும் இவ­ரி­டமே உள்­ளன. இவர் வெளி­யிட்­டுள்ள ஆவ­ணங்­களே துல்­லி­ய­மான தர­வு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­க­ளையும் முன்­வைக்­கின்­றன.

முஸ்லிம் சமு­கத்தின் இருப்பு தொடர்பில் அதிகம் சிந்­தித்த ஒரு­வ­ராக இவர் உள்ளார். இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு கட்சி வேண்டும் என்று சிந்­தித்து டாக்டர் பதி­யுதீன் மஹ்மூ­­துடன் இணைந்து முஸ்­லிம்­க­ளுக்­கான முத­லா­வது தனித்­துவ அர­சியல் கட்­சியை ஆரம்­பித்­தவர்.

இவரை செய­லா­ள­ரா­கவும் டாக்டர் பதி­யுதீன்  மஹ்­மூதை தலை­வ­ரா­கவும் கொண்டு முஸ்லிம் ஐக்­கிய விடு­தலை முன்­னணி என்னும் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்­டது. 

இக்­கட்­சியே முதன் முதலில் புலி­க­ளுடன் 1988 ஆம் ஆண்டு பேச்­சு­வார்த்தைநடத்த இந்­தியா சென்று முஸ்­லிம்­களின் பாது­காப்பு தொடர்பில் ஒப்­பந்தம் ஒன்­றையும் மேற்­கொண்­டி­ருந்­தது.

இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வில் வடக்கு முஸ்­லிம்­க­ளுக்கு முஸ்லிம் தனி­மா­காணம் என்ற கருத்தை முதன் முதலில் வெளி­யிட்­ட­வரும் இவரே. முஸ்லிம் தனி­மா­காணம் தொடர்­பிலும் முஸ்லிம் கரை­யோர நிர்­வாக மாவட்டம் தொடர்­பிலும் பூரண விளக்­கத்தை புள்­ளி­வி­ப­ரங்­க­ளுடன் இவரே முன்­வைத்­துள்ளார். 

மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு அடிப்­ப­டை­யாக இருந்­த­வர்­களில் இவரும் ஒருவர். தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் தற்­போ­தைய அமை­வி­ட­மா­னது அரிசி ஆலை­யா­கவும் முதலை, பன்­றிகள் வாழும் காடா­க­வுமே அப்­போது இருந்­தது.

அவ்­வி­டத்தை பல்­க­லைக்­க­ழக அமை­வி­ட­மாக மாற்றும் பொறுப்பை இவ­ரி­டமே அஸ்ரப் ஒப்­ப­டைத்தார்.

இப்­பல்­கலைக் கழ­கத்­திற்­கான உள்­ளக கட்­டு­மான வேலை­க­ளுக்­கான குழுவின் தலை­வ­ராக அஸ்­ர­பினால் நிய­மிக்­கப்­பட்­டவர் இவரே.

அது­ மாத்­தி­ர­மன்றி முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசிய கொள்கை பரப்புச் செய­லா­ள­ரா­கவும் அஸ்ரப் இவரை நிய­மித்­தி­ருந்தார்.

இவர் இலங்­கையில் உள்ள நில அள­வை­யா­ளர்­களில் சிரேஸ்­ட­மா­னவர் என்­ப­தனால் இவரே தென்­கி­ழக்குப் பல்­கலைக் கழ­கத்­திற்­கான நில வடி­வ­மைப்­பையும் கட்­டி­டங்­க­ளுக்­கான அமை­வி­டங்­க­ளையும் மேற்­கொண்­டார்.

தற்­போது 81 வய­தை தொட்­டுள்ள இவர் தனது முதுமைப் பரு­வத்தில் வாழ்ந்து வரு­கின்றார். இன்றும் வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பான ஆவ­ணப்­ப­டுத்­தல்­களை மேற்­கொண்டு வரு­கின்றார்.

எம்.ஐ.எம்.முகைடீன் என்­பவர் சமூகச் செயற்­பாட்டில் ஈடு­ப­டாமல் தனது கல்விச் செயற்­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்­தி­ருந்­தால் இல­கு­வாக கலா­நி­திப் ­பட்­டங்­களைப் பெற்­றி­ருப்பார்.

எனினும் இவர் தன்னை விட தனது சமூ­கத்­திற்கு முக்­கி­யத்­துவம் கொடுத்துச் செயற்­பட்­டுள்ளார். சுமார் ஐம்­பது வரு­டங்­களை முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை ஆவ­ணப்­ப­டுத்­து­வ­தற்காக­வே செல­வ­ழித்­துள்ளார். 

எம்.ஐ.எம்.முகைடீன் போன்ற சமூக செயற்­பாட்­டா­ளர்­களை முஸ்லிம் சமூகம் கௌர­விப்­பதன் மூலமே எதிர்­கால முஸ்லிம் சமு­தா­யத்­திற்­கான சமூக செயற்­பாட்­டா­ளர்­களை உரு­வாக்க முடியும். 

கடந்த முறை முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்ஸூர் அவர்­க­ளுக்கு தென்­கி­ழக்கு பல்­க­லைக் ­க­ழகம் கௌரவ கலா­நிதிப் பட்டம் வழங்கி கௌர­வித்­தது.

அதே போன்று இம்­முறை எம்.ஐ.எம்.முகை­டீ­னுக்கு அவர் உயி­ருடன் இருக்கும் போது கௌரவ கலா­நிதிப் பட்டம் வழங்கி கௌர­விக்க தென்கிழக்கு பல்கலைக்கழகம்  முன்வரவேண்டும். இவ்விடயம் தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் செனற் ஆராய வேண்டும் என வேண்­டு­கோள்­வி­டுக்க விரும்­பு­கி­றோம்.

தலைவர் அஸ்ரப் இல்லாத இத்தருணத்தில் தற்போது செயற்படும் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், கல்வியியலாளர்கள், உலமாக்கள் இவ்விடயம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துமாறு கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு தனது அறிக்­கையில் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­து.