நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்கி ஜனநாயக ரீதியில் புதிய ஆட்சியை உருவாக்க மிகப் பெரிய கடினமான இலக்கை நோக்கி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதிக்குரிய பலத்தை பயன்படுத்தாமல் வெறுமனே பெயரளவில் செயற்படுகிறார் என்ற விமர்சனங்கள் பலர் மத்தியிலும் நிலவுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நாட்டின் எதிர்காலத்தில் ஜனநாயக ஆட்சி முறையை கொண்டு வர ஜனாதிபதி சில தீர்மானங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அநுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார்.
மேலும், இச்செயற்பாடானது எதிர்காலத்தில் பலம் பொருந்திய ஜனநாயகம்மிக்க அரசியல் கலாச்சாரத்திற்கு வலுவூட்டும் என அமைச்சர் அநுர பிரியதர்தஷன யாப்பா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.