க.கிஷாந்தன்
மலையக அரசியல்வாதிகள் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் முழு மணதோடு செயல்ப்படவில்லை தமது சுபபோக வாழ்கையை காப்பாற்றுவதற்காகவும் அவர்களின் அரசியலை தக்கவைத்து கொள்வதற்காகவும் கூட்டு ஓப்பந்தத்தை வைத்துகொண்டு காய் நகர்த்துவதாக அக்கரப்பத்தனை பெரியநாகவத்தை தோட்டத்தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
17.10.2016 அன்று மேற்படி தோட்ட தொழிலாளர்களால் சம்பள உயர்வினை கோரி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தனர்
காலை 08 மணியளிவல் தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சுமார் 03 மணி நேரம் இடம் பெற்றது.
இதில் 180 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கருப்பு கொடி ஏந்தியவாறும் பதாதைகளை பிடித்தவாறும் டயர்களை எரித்து தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரிகள் சந்தாவை வாங்கிகொண்டு தங்களை ஏமாற்றுவதாகவும் சம்பள உயர்வுக்கு தொழிலாளர்கள் போராடி கொண்டியிருக்கின்ற போது, ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருப்பு பெட்டியை எடுத்துக்கொண்டு இந்தியா சென்றது எமக்கு செய்த பாரிய துரோகம்.
பெற்றோல் கேனுடன் பாராளுமன்றம் சென்றது நாடகமா சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்காவிட்டால் சந்தா பணத்தினை நிறுத்துவோம், கொடு கொடு ஆயிரம் ரூபா சம்பளத்தினை கொடு என ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர்;.
உடனடியாக சம்பள உயர்வினை வழங்காவிட்டால் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதுடன் கொழும்பிற்கு சென்று கம்பனிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்தனர்.