செயற்பாட்டிலுள்ள அமைச்சரவைக்கு மேலதிகமாக, அரசியல் அமைச்சரவை

இலங்கையில் தற்போது செயற்பாட்டிலுள்ள அமைச்சரவைக்கு மேலதிகமாக, அரசியல் அமைச்சரவை ஒன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த அமைச்சரவைக்கு 15 உறுப்பினர்களை பெயரிடுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு பெயரிட்டதன் பின்னர் எதிர்வரும் வாரம் செவ்வாய்க்கிழமை இந்த அமைச்சரவை ஒன்றுக் கூட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கூட்டணி அரசாங்கம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் கூட்டு கட்சியுடன் அரசியல் அமைச்சரவை ஒன்று தனியாக நியமிக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் புதிய அரசியல் அமைச்சரவையும் அதற்கமைய நியமிக்க ஆயத்தமாகின்றது.

பிரத்தானிய சம்பிரதாயத்திற்கமைய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அமைச்சரவை சந்திப்பு நடத்தப்படும் நாளில் அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமைத்துவத்தில் அரசியல் அமைச்சரவை கூடும்.

அரசாங்கதிலுள்ள கட்சியில் காணப்படும் முரண்பாடான நிலைப்பாட்டினை கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்த்துக் கொள்வதற்கு இந்த அரசியல் அமைச்சரவை செயற்படும்.

விசேடமாக அரசியல் அமைச்சரவையின் பிரதான கட்சிகளின் சிரேஷ்டர்கள் மற்றும் பங்கு கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்குவது பிரித்தானியாவின் சம்பிரதாயம் என தெரிவிக்கப்படுகின்றது.