கடந்த சில தினங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாத பிரதிவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டமையே இதற்கான காரணமாகும்.
எனினும் ஜனாதிபதியின் கருத்துக்கு கோத்தபாய ராஜபக்ஷ நன்றி தெரிவித்திருந்தார்.
சீன விஜயத்தில் ஈடுபட்டுள்ள கோத்தபாய அங்கிருந்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், இலங்கையிலுள்ள சிலருடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
கோத்தபாயவின் இந்த நடவடிக்கையானது, ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கள் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தெடார்பில் கோத்தபாய ராஜபக்ஷ நேற்றிரவு நாமல் கடுமையாக திட்டியதாக தெரிய வருகிறது. அத்துடன் தவறான வேலையை அல்லவா செய்துள்ளார் என நாமல் அங்கிருந்தவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் எதற்கு அங்கு இருந்து இங்கு கருத்து வெளியிட வேண்டும். அதன் ஊடாக அடுத்த முறையும் மைத்திரி தலைவராகிவிடுவார் என குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு என்றால் அவர் குறித்து எவ்வித நம்பிக்கையும் இல்லை. எப்படியிருந்தாலும் நாங்கள் அவருடனே (பசில்) இருக்க வேண்டும். ஏன் என்றால் அவரால் மாத்திரமே இதனை செய்ய வேண்டும். எனினும் என்ன தான் செய்வதென நாமல் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் நாமல் மற்றும் பசிலின் இணைப்பு அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த இருவரும் சில காலங்களால் கீரியும் – பாம்புமாக செயற்பட்டுள்ளனர்.
எனினும் பசிலும் இதே கருத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோத்தபாய அனைத்தையும் கெடுத்து விட்டார் என பசில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கோத்தபாய தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அன்று போன்று இன்றும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.