கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இருந்து அக்கரைப்பற்று தவிசாளராக இருந்த நன்பரினால் சிலரது பெயரை குறிப்பிட்டு அவர்களூடாக மைதானத்தில் தேசிய காங்கிரஸின் தலைவரினால் அவரது மக்கள் வங்கி கட்டிடத்தை கட்டி இறுதி வேலைகளுக்காக பணம் தேவைப்பாடாக இருந்ததாகவும்
சகோதரர் குறிப்பிட்ட நபரிடம் இருந்து அவற்றை பெற்றுக்கொண்டு பின்னர் மைதானத்தில் மண் நிரப்பி அவற்றை ஈடு செய்ததாகவும் குறிப்பிட்டார் .
இது தொடர்பில் உண்மைக்குண்மையாக இந்த ஊருக்காக அரும்பாடுபட்ட அதாஉல்லாஹ் மீது பூசப்பட்ட சேறும் இதன் உண்மை தண்மையை அறிய தனிப்பட்ட ரீதியாக சகோதரர் ஹசன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டேன் அவர் என்னிடம் என்ன தம்பி நான் அவ்வாறு அதாஉல்லாஹ் அமைச்சருக்கு எச்சந்தர்பத்திலும் பணம் வழங்க வில்லை பிரதேச சபை வேலைகளையெல்லாம் அந்த நேரத்திலும் அவர்தானே (தவிசாளர் ) செய்தார் என்றார் .
பின்னர் சகோதரர் மஜித் (தொழில்நுட்ப உத்தியோகத்தருடன்)தொடர்பு கொண்டேன்
இந்த செய்தியினை நான் பார்க்கவில்லை ஆனால் அவ்வாறு தவம் சொன்னால் இவ்வாறான விடயங்களுக்கு ஒரு போதும் துணை போகவில்லை ஆனால் சேமன் என்கிறவர் சொல்லி நான் தவறு செய்வதாக சொல்வதில் அவர் தவறிழைத்திருகிறார் என்பது தெளிவாகிறது தம்பி என்றார் .
இது இவ்வாறு இருக்க பாமர மகனுக்கு கூட தெளிவாக தெரிந்த CECB என்பது அரசாங்கத்திற்கு சொந்தமான நிருவனமாகும் அது கொமிசனுக்காக ஒரு கட்டடம் கட்டி கொடுத்தாக சொல்வது எவ்வளவு பாரிய முட்டாள்தனமாக பொய் குற்றச்சாட்டாகும்.
மக்கள் வங்கி அமைந்திருக்கின்ற இடம் அதாஉல்லாஹ் அமைச்சருக்கு சொந்தமானதாகும்
ஆனால் மக்கள் வங்கியினால் அமைச்சருடைய இடத்தில் கட்டடம் கட்டப்பட்டு பின்னர் அந்த கட்டடம் கட்டிய பணத்தை அமைச்சருக்கு செலுத்த வேண்டிய வாடகை பணத்தில் சுமார் எட்டு வருடங்களுக்கு மேலாக வங்கி பெற்றுக் கொண்டுதான் கடனை திருப்பி பெற்றுக் கொண்டது .
மைதானத்துக்கு மண் நிரப்புகின்ற விடயத்தை உள்ளூராட்சி சபைகள் தான் மேற் கொள்ளும் எனவே அக்கரைப்பற்று மைதானம் பள்ளமாக இருந்தமையால் பல தடவை அமைச்சரால் பிரதேச சபைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது .
ஆகவே அமைச்சர் சிறந்த தரமான மைதானத்தை உருவாக்க வேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறார்
என்கின்ற உண்மையும் அகமட் ஹாஜியார் அவ் வேலையை பொறுப்பெடுத்து கொண்டதால் தனக்கு கிடைக்க வில்லை என்கின்ற ஆத்திரம் தான் அகமட் ஹாஜி யுடனான உறவு முறிவதற்க்கு காரணமாகவும் இருந்த தாக இன்னொருவர் என்னிடம் கூறினார் .
எனவே அதாஉல்லாஹ் வை கொமிசன் பெறுபவராக காட்டப்போய் தான் தவறிழைத்ததாக ஏற்றுக் கொள்கின்ற அரசியல் தற்கொலை முயற்ச்சியை சகோதரர் மேற் கொண்டிருக்கிறார் பொல்லை கொடுத்து அடியை பெற்றுக் கொண்டிருக்கிறீர்
இது இரண்டாம் தடவை
ஏற்கனவே அமைச்சரின் தாயை இழிவுபடுத்தி பேசியதன் மூலமும் மற்றவர்களின் அதிருப்தியை சம்பாதித்த நண்பர் அதாஉல்லாஹ் தவறிழைத்தாகவும் தான் ஒத்துழைத்தாகவும் கூறுகிறார்.
நண்பரே….அக்கரைப்பற்று என்பது எனதோ அல்லது உங்களதே அல்லது அதாஉல்லாஹ் வினதோ சொத்தல்ல
இது வரலாறு நெடுகிலும் வாழ்கின்ற எம்மவர்களின் பூமி
இது அழகிய பண்பாடுகளால் இலக்கியத்தால் நாகரிகத்தால் சூழப்பட்ட கருங்கொடி பட்டிணம்
இங்கு அரசியல் குறுகிய நோக்கங்கங்களுக்கு பண்பாடற்ற போலியான குற்றச்சாட்டுகளை முன் மொழிய வேண்டாம் , நாம் உங்கள் தொடர்பில் யார் என்ன குற்றச்சாட்டை முன் வைத்தாலும் தகுந்த காரணங்கள் இருந்தும் ஒரு முஸ்லிம் உடைய மானம் இன்னொருவருடைய அமானிதம் எனும் கோட்பாடுகளுடன் இருக்கின்றோம்.
குறிப்பு இது தொடர்பில் உரியர்களின் பதிலை எந்த நேரமும் கேட்பவர்களுக்காக வழங்க நாம் தயாரக இருக்கிறோம்.
அஸ்மி ஏ கபூர் (உரியவர்களிடம் கேட்டறிந்து கொண்டது)