ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேக நபருக்கு பிணை

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான இராணுவப் புலனாய்வாளர் சார்ஜண்ட் பிரேமானந்த் உதலாகமவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

ரிவிர பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் சார்ஜண்ட் உதலாகம அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். 

அத்துடன் பரபரப்பாக பேசப்பட்ட லசந்த கொலைச்சம்பவத்திலும் சந்தேக நபராக சார்ஜண்ட் உதலாகம பெயரிடப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது நீதிபதி காவிந்தா நாணயக்கார அவருக்குப்பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இருபத்தி ஐயாயிரம் ரூபா ரொக்கம் மற்றும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் மூன்றைச் சமர்ப்பித்து பிணையில் செல்லுமாறு நீதிமன்றம் சார்ஜண்ட் உதலாகமகவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் இராணுவத்தினரின் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது லசந்த படுகொலை வழக்கில் இராணுவப் புலனாய்வாளர் சார்ஜண்ட் உதலாகம நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.