பதில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சராக மனுச நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதி அமைச்சர் நாணயக்கார இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக அவரது பணிகளை மேற்கொள்வதற்காக மனுச நாணயக்கார பதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.