பெரிய ஹஸ்ரத் அவர்களின் மறைவையொட்டி காத்தான்குடியில் துக்க தினம் அனுஷ்டிப்பு

பழுலுல்லாஹ் பர்ஹான்

 

 இலங்கை முஸ்லிம்களின் பேரபிமானம் பெற்ற இந்தியாவின் தமிழ்நாடு அதிராம்பட்டிணத்தப் பிறப்பிடமாகவும், காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபரும், இலங்கையில் பல நூறு உலமாக்களையும், ஹாபிழ்களையும் உருவாக்கியவரும், மூத்த உலமாவும், கொழும்பு சம்மாங்கோடு ஜாமிஉல் அழ்பர் ஜும்ஆ பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளருமான சங்கைக்குரிய மௌலானா மௌலவி ‘ஷைகுல் பலாஹ்’ எம்.ஏ. அப்துல்லாஹ் (றஹ்மானி) பெரிய ஹஸ்ரத் அவர்கள் நேற்று 12 புதன்கிழமை மாலை (வபாத்தானார்கள்) மரணமடைந்தார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

 

dsc_2466_fotor

 

அந்நாரின் ஜனாஸா தொழுகை இன்று (13.10.2016) அஸர் தொழுகையைத் தொடர்ந்து சுமார் 4 மணிக்கு ஜாமிஉழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடாத்தபட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் ரஹ்மானின் மறைவையொட்டி காத்தான்குடி பிரதேசத்தில் உணவுச்சாலைகள் (ஹோட்டல்கள்) மற்றும் பொதுச் சந்தை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.

 

dsc_2434_fotor

 

தற்போது அன்னாரின் ஜனாஸா பொது மக்கள் பார்வைக்காக காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளதுடன்,ஜனாஸாவை பார்வையிட அதிகளவான உள்ளுர்,வெளியூர் உலமாக்கள்,அரசியல் பிரமுகர்கள்,மதத் தலைவர்கள் ,பெரும் திரளான பொது மக்கள் ஆகியோர் வந்த வண்ணமுள்ளனர்.

இதனால் சன நெரிசலை குறைக்க ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரி வீதி காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசாரின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

dsc_2474_fotor