அமெரிக்க அதிபர் ஆவதற்குகுரிய குணம், அறிவு , கம்பீரம், நேர்மை கூட இல்லாதவர் டிரம்ப்

அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம்  விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. 
obama-vs-trump-americans-will-not-vote-for-donald-trump-1
தற்போதைய அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின்  மனைவி ஹிலாரி போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபரான டொனால்டு  டிரம்ப் நிறுத்தப்பட்டு உள்ளார். இருவரும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிலாரி கிளிண்டனுக்கு  ஆதரவாக அதிபர் ஒபாமா பிரச்சாரம் செய்து வருகிறார். 
 இந்நிலையில் வடக்கு கரோலினா மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒபாமா பேசியதாவது:-
அமெரிக்க அதிபர் ஆவதற்குகுரிய குறைந்தபட்ச குணம், அறிவு, கம்பீரம், நேர்மை கூட இல்லாதவர் டொனால்டு டிரம்ப். கடந்த  2005-ம் ஆண்டு பெண்கள் குறித்து டிரம்ப் பேசிய பேச்சு அவர் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதி இல்லாதவர் என்பதை  காட்டுக்கிறது.  
அரசு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு ஹிலாரியே மிகவும் சிறந்தவர். பின்லேடன் கொல்லப்பட்டபோது  வெள்ளை மாளிகை கண்காணிப்பு அறையில் ஹிலாரியும் இருந்தார். அப்போது அமெரிக்க படைகளுடன் ஹிலாரி நடத்திய  உரையாடலை நான் அறிவேன். அமெரிக்க அதிபர் ஆவதற்கு எல்லா தகுதிகளையும் ஹிலாரி பெற்றுள்ளார். இவ்வாறு ஒபாமா பேசினார்.