டிரம்ப்பின் கனவு தாஜ்மஹால் இழுத்து மூடப்படுகிறது..!

201610101424150676_trump-taj-mahal-to-close-today_secvpfஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கடந்த 1990-ம் ஆண்டு அட்லான்ட்டிக் நகரில் மிக பிரமாண்டமான சூதாட்ட விடுதி ஒன்றை தொடங்கினார். இந்தியாவில் உள்ள தாஜ்மஹாலைப் போன்ற அமைப்புடன் உருவாக்கப்பட்ட இந்த விடுதிக்கு ‘டிரம்ப் தாஜ்மஹால்’ என அவர் பெயரிட்டிருந்தார்.

சுமார் 26 ஆண்டுகளாக வெற்றிகரமாக கல்லாகட்டி வந்த இந்த கிளப்பில் சுமார் 3 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அட்லான்ட்டிக் நகரின் சமீபத்திய சட்டங்களின்படி இந்த பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வுகால பலன்களை வழங்க இந்த விடுதியின் நிர்வாகம் மறுத்து விட்டது.

இதையடுத்து, இந்த பணியாளர்கள் சார்ந்திருக்கும் தொழிற்சங்கம் கடந்த ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது.
698e95fe-029b-4b15-9080-5f6f6b990c6d_l_styvpf
தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் டிரம்ப் தாஜ்மஹால் நிர்வாகத்துக்கும் இடையில் நடைபெற்ற பலசுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 5.59 மணிக்கு டிரம்ப்பின் கனவு தாஜ்மஹாலான இந்த சூதாட்ட விடுதி இழுத்து மூடப்படுகிறது.