நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் இரண்டு அதிகாரிகளிடமிருந்து 200 மில்லியன் ரூபா நட்டஈடு பெற்றுத் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
அடிப்படையற்ற ஓர் குற்றச்சாட்டு தொடர்பில் தம்மை கைது செய்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் வசந்த சமரசிங்கவின் முறைப்பாட்டின் அடிப்படையில் தம்மை கைது செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் காவல்துறை பரிசோதகர் ஒருவர் ஆகியோரிடம் நட்டஈடு கோரியுள்ளார்.
கிறிஸ் நிறுவனக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நாமல் ராஜபக்ஸ கடந்த ஜூலை மாதம் 11ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.